For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடுக்கப்பட்ட.. ஒதுக்கப்பட்டவர்களின் திறமையை வெளிக்காட்ட மேடை..புவேனஷ்வரில் ஜும் இந்தியா முகாம் !

திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், குடிசை வாழ் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் புவனேஷ்வரில் திறன் தேடும் மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், குடிசை வாழ் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் புவனேஷ்வரில் திறன் தேடும் மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்தியாவில் இப்படி ஒரு திறன் தேடும் முகாமை, நிகழ்வை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள் என்றுதான் கூறவேண்டும். ஆம் அப்படி ஒரு முகாம் புவனேஷ்வரில் நடக்க உள்ளது. இதில் ஏழைகள், பெற்றோர் இல்லாத குழந்தைகள், குடிசை வாழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், திறமையை நிரூபிக்கவும், அவர்களும் சமுதாயத்தில் நல்ல நிலையில் வாழவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

JHOOM INDIA gives a platform to underprivileged &marginalized to show their talent

நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஒடிசாவில் புவனேஷ்வரில் இந்த முகாம் நடக்கிறது. அங்கு ஜெயதேவ் விஹார் பகுதியில் உள்ள ஜிகேசிஎம் & கிழக்கு கடற்கரை ரயில்வே ஆடிட்டோரியத்தில் (GKCM & East Coast Railway Auditorium) இந்த முகாம் நடக்க உள்ளது.

இதன் மூலம் பெற்றோர் இல்லாத குழந்தைகள், குடிசை வாழ் பகுதிகளில் பகுதியில் வசிக்கும் குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோர் தங்கள் திறமையை நிரூபிக்கவும், நிலையை வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளவும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த தேசிய அளவிலான திறமை தேடும் முகாமிற்கு ஜும் இந்தியா (JHOOM INDIA) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை ஒடிசா மாநில அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு (SSEPD) இணைந்து நடத்துகிறது. அதேபோல் ஒடிசா அரசு மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆகியவையும் இந்த முகாமை இணைந்து நடத்துகிறது.

JHOOM INDIA gives a platform to underprivileged &marginalized to show their talent

முகாமின் சிறப்பம்சங்கள்:

இந்தியாவின் பல்வேறு பகுதியில் ஒடுக்கப்பட்டு இருக்கும் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகள் பலர் இந்த முகாமில் கலந்து கொள்வார்கள்.

இதில் நிறைய போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மற்றும்இரண்டாம் இடம் வரும் திறமையான சிறுவர்களுக்கு முறையான பாராட்டுகளும் பரிசுகளும் விருந்தினர் மூலம் வழங்கப்படும்

சாந்திதாம் பவுண்டேஷன் (SHANTiDHAM FOUNDATION) நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி முறையான வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

தேசிய அளவில் வெளியாகும் இதழான சமர்த் (SAMARTH) இதழில் இந்த குழந்தைகள் குறித்த எழுச்சி தரக்கூடிய கதைகள் இடம்பெறும், அந்த இதழ் தேசிய அளவில் விற்பனை செய்யப்படும்.

இந்த குழந்தைகள் தங்கள் திறமையை பல்வேறு துறைகளில் வெளிக்காட்ட மேடை அமைத்து தரப்படும், டான்ஸ், பாடல், வேகமாக வரைதல், நடிப்பு, மிமிக்கிரி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் வழங்கப்படும்.

பொதுவாக சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒடுக்கப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஜும் இந்தியா (JHOOM INDIA) மூலம் இந்த குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சமுதாயத்தில் முக்கியஸ்தர்களாக மாறுவார்கள்.

இந்த விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி, அதே புவனேஷ்வர் ரயில்வே ஆடிடோரியத்தில், நவம்பர் 8ம் தேதி, மாலை 6 மணிக்கு நடக்கும்.

ஜும் இந்தியா (JHOOM INDIA) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் கருத்துப்படி, இந்த நிகழ்ச்சி மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி, சமுதாயத்தில் தாங்களும் ஒருவர் என்று உணர முடியும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதற்காக பார்வையாளர்கள் அழைத்து வரப்படுவார்கள். குழந்தைகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் பலர் இந்த நிகழ்விற்கு வருவார்கள். அரசு, கார்ப்ரேட், மருத்துவம், மென்பொருள் துறை, சிறு வியாபார துறை ஆகிய பல்வேறு துறைகளில் இருந்து பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

English summary
JHOOM INDIA gives a platform to underprivileged &marginalized to show their talent in Bhubaneswar, Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X