For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2008 பாட்லா என்கவுன்டருக்கு பழிக்கு பழிவாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாட்லா என்கவுன்டருக்கு பழிக்கு பழிவாங்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுன்டரில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் ஷர்மாவும் பலியானார்.

Jihadist outfit with links to ISIS threatens to avenge Batla House encounter

இந்த சம்பவம் நடைபெற்ற ஆறு ஆண்டுகள் நிலையில், அதன் நினைவு நாளில் வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவிரவதிகள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ஐ..எஸ். தீவிராவதிகள் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை தியாகிகள் என வர்ணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் "பாட்லா இரவு- விரைவில் பழிவாங்குவோம்" என்ற தலைப்பில் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்கள் தீவிரவாத அமைப்பின் ட்விட்டரில் வெளிவந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு பாட்லா என்கவுன்டரில் கொல்லப்பட்ட இந்தியன் முஜாகிதின் தீவிராவதிகளை தியாகிகள் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்புடன் தொடர்புடைய அன்சார்-உல்-தாவ்ஹித்-பிபிலாத் அல் ஹிந்த் என்ற தீவிராத அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த செய்தி பரிமாற்றத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருவாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
A jehadist outfit with links to the ISIS has threatened to launch an attack to avenge the victims of the Batla House encounter. The jehadist group called Ansar ut Tawheed Fi Bilad Al Hind issued the threat on Twitter on Friday on the sixth anniversary of the Batla House encounter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X