For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

370வது பிரிவு ரத்து என்னும் மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரும்: மெகபூபா முப்தி

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரு என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யபப்ட்டது. இதனையடுத்து மெகபூபா முப்தி உள்ளிட்ட அந்த மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் சிறைப்படுத்தப்பட்டனர்.

14 மாத சிறைவாசம்... மெகபூபா முப்தி விடுதலை- ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!14 மாத சிறைவாசம்... மெகபூபா முப்தி விடுதலை- ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!

பொது பாதுகாப்பு சட்டம்

பொது பாதுகாப்பு சட்டம்

எந்த ஒரு குற்றவழக்கும் இல்லாமல் குற்றச்சாட்டும் இல்லாமல் பல மாதங்களாக இவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். பல தலைவர்கள் மீது பொதுபாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மெகபூபா முப்தி விடுதலை

மெகபூபா முப்தி விடுதலை

ஆனால் மற்றொரு முன்னாள் முதல்வராக மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருந்தார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில் 14 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமையன்று மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.

370வது ரத்து- கொடூரமானது

இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான மெகபூபா முப்தி, ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது: ஓராண்டு காலத்துக்கும் மேலான சிறைவாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன். மத்திய அரசின் 370வது பிரிவு ரத்து என்கிற கொடூரமான முடிவு குறித்துதான் நான் சிந்தித்து கொண்டே இருந்தேன்.

நமது போராட்டம் தொடரும்

நமது போராட்டம் தொடரும்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சாசனப் பிரிவு மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கான நமது போராட்டம் தொடரும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீரிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

English summary
Jammu Kashmir Former Chief Minsiter and PDP President Mehbooba Mufti vows to fight back against the Centre's cruel decision to abrogate Article 370
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X