For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனநாயக ஆசாத் கட்சி 'Democratic Azad Party- புதிய கட்சி பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜனநாயக ஆசாத் கட்சி (Democratic Azad Party) என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்பட்டனர்.

 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நோ சான்ஸ்! ஆசாத் சொன்னதும் மெகபூபா முஃப்திக்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நோ சான்ஸ்! ஆசாத் சொன்னதும் மெகபூபா முஃப்திக்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி

கலகக் குரல்

கலகக் குரல்

ஆனால் காங்கிரஸ் மேலிடம் இந்த தலைவர்களின் கருத்தை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது. இதனால் பல மாநிலங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சிகளில் இருந்து வெளியேறினர். மேலும் பல தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அப்போதும் கூட காங்கிரஸ் மேலிடம் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகவில்லை.

காங்கிரஸில் இருந்து விலகல்

காங்கிரஸில் இருந்து விலகல்

அண்மையில் 5 மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த போது சில மாதங்கள் மட்டும் சீரமைப்பு குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்தது. பின்னர் அதனையும் கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் அடுத்தடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறினர்.

ஜனநாயக ஆசாத் கட்சி

ஜனநாயக ஆசாத் கட்சி

காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம்நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்திருந்தார். தமது அரசியல் கட்சியின் பெயரை ஜம்மு காஷ்மீர் மக்களே முடிவு செய்வார்கள் எனவும் குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தமது கட்சியின் பெயரை குலாம் நபி ஆசாத் அறிவித்தார். தமது கட்சியின் பெயர் ஜனநாயக ஆசாத் கட்சி 'Democratic Azad Party என அறிவித்திருக்கிறார் குலாம் நபி ஆசாத். மேலும் நீலம்-வெள்ளை- மஞ்சள் நிறத்திலான கட்சி கொடியையும் குலாம் நபி ஆசாத் அறிமுகம் செய்தார்.

1,500 பெயர்கள் பரிசீலனை

1,500 பெயர்கள் பரிசீலனை

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், கட்சி பெயருக்கு உருது, சமஸ்கிருத மொழிகளில் 1,500 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஜனநாயகத்தன்மையுடனும் அமைதியையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிற ஒரு பெயராக ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரை முடிவு செய்துள்ளோம் என்றார்.

English summary
Ghulam Nabi Azad will announce new political party today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X