For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்- சைடு பிசினஸ் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்கின் ஜனாதிபதி பதக்கம் பறிப்பு?

Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரவாதிகளுடன் சிக்கிய காஷ்மீர் போலீஸ் அதிகாரி நாசவேலைக்கு சதி ?

    ஶ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதையே ஒரு சைடு பிசினஸ் போல செய்து வந்திருக்கிறார் காஷ்மீரில் பிடிபட்ட போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதக்கம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது.

    ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்ட குற்றவாளிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கினார் ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங். 2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கிலேயே தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தாவிந்தர்சிங் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

    JK Police Officer Davinder Singh likely to be stripped off President award

    ஆனால் ஒரு தீவிரவாதியின் வாக்குமூலத்தை நம்புவதா என ஐபி, ரா உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் தாவிந்தர் சிங் விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. 2001 நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளுக்கு டெல்லியில் தங்க ஏற்பாடு செய்ததும் தாவிந்தர் சிங்தான்.

    எஸ்.ஐ. வில்சன் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்- துப்பாக்கி கொடுத்த இஜாஸ் பாஷா கைதுஎஸ்.ஐ. வில்சன் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்- துப்பாக்கி கொடுத்த இஜாஸ் பாஷா கைது

    ஜம்மு காஷ்மீரில் உயர் போலீஸ் அதிகாரி என்பதால் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதும் அதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் தாவிந்தர் சிங். பல தீவிரவாதிகளை தமது வீட்டிலேயே தங்க வைத்தும் அதற்கும் பணம் வாங்கியிருக்கிறார்.

    தற்போது தாவிந்தர் சிங்குடன் சிக்கிய ஓட்டுநர், பாகிஸ்தானுக்கு 5 முறை சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாவிந்தர் சிங் உள்ளிட்டோரை ஐபி, ரா, என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருதுருவி விசாரிக்கின்றனர்.

    இதனால் தாவிந்தர் சிங்குக்கு கடந்த ஆண்டு ஜனாதிபதி அளித்த பதக்கம் பறிக்கப்பட இருக்கிறது.

    English summary
    Sources said that, jammu Kashmir Police Officer Davinder Singh likely to be stripped off President award.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X