For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேஎன்யூவில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பியது வெளியாட்கள்தானாம்... பல்கலை. விசாரணை குழு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அப்சல் குரு நினைவு நாள் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியது வெளிநபர்கள்தான் என அப்பல்கலைக் கழகத்தின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த மாதம் 9-ந் தேதி அப்சல் குருவுக்கு நீதி கோரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.

JNU row: 'Outsiders' raised Pakistan Zindabad slogans, says internal committee

இதனைத் தொடர்ந்து ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது கன்யாகுமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுத்திருக்கிறது.

இதனிடையே ஜேஎன்யூ நிகழ்ச்சி தொடர்பான வீடியோவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கதை திட்டமிட்டு சேர்த்து ஊடகங்கள் ஒளிபரப்பியதும் அம்பலமானது. இந்த சம்பவங்கள் குறித்து ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.

அக்குழுவின் விசாரணை அறிக்கையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை அடையாளம் தெரியாத வெளிநபர்கள்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அப்சல் குரு ஜிந்தாபாத், இந்தியாவே திரும்பிப் போ என்ற முழக்கங்களை கார்கி, ஸ்வேதா, ரமா, சிந்து உள்ளிட்டோர் எழுப்பியதாகவும் அதில் தெரிவ்க்கப்பட்டுள்ளது.

English summary
The slogan of 'Pakistan Zindabad', which landed Jawaharlal Nehru University in a massive political controversy last month, was raised by 'outsiders', according to the high-level internal committee that was constituted to probe the February 9 incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X