For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க மாஸ்க் பரோட்ட செஞ்சா.. நாங்க மாஸ்கில் "நான்" செய்வோம்.. விழிப்புணர்வுக்காக போடும் போட்டி!

Google Oneindia Tamil News

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் தமிழகத்தில் உள்ள மதுரையை போல் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் உணவு வகைகளை தயார் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

என்னதான் நல்லது கெட்டது என இருந்தாலும் அதை வார்த்தைகளாக சொல்வதை காட்டிலும் படம் போட்டோ அல்லது பொம்மைகளாக காட்டினால் மட்டுமே புரியும்.

அதற்காகத்தான் சாலை விதிகள், அபாயகரமானவை உள்ளிட்டவற்றை படங்களாக வரைந்துள்ளனர். அது போல் உயிர் கொல்லி நோய் என்றாலும் அந்த எப்படி இருக்கும் என்பது குறித்தும் படங்களாகவோ பொம்மைகளாகவோ வரைந்திருந்து சுகாதாரத் துறை விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

என்ன மனுஷன்யா.. பிறந்த நாள் பரிசாக.. 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சோனு சூட்!என்ன மனுஷன்யா.. பிறந்த நாள் பரிசாக.. 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சோனு சூட்!

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

இந்த நிலையில் கொரோனா குறித்து அது எப்படி இருக்கும் என்பது குறித்தும் சுகாதாரத் துறை வடிவங்களாக நமக்கு காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொரோனா சார்ந்த உணவுகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சைவ உணவுகள்

சைவ உணவுகள்

ஜோத்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன. இங்கு ராஜஸ்தானின் பாரம்பரிய உணவுகளான நான், கோப்தாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுரையில் பரோட்டாவை எப்படி மாஸ்க் பரோட்டாவாக மாற்றினார்களோ , அது போல் இந்த நானையும் மாஸ்க் நானாக தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. மாஸ்க் வடிவிலான நான்களும், கொரோனா வைரஸ் வடிவத்தில் கோப்தாக்கள் உருவாக்கப்பட்ட கிரேவியும் ஹோட்டலில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து அந்த உணவு பொருட்களை தயார் செய்த வேதிக் என்பவர் கூறுகையில் இந்த இரு உணவு பொருட்களை தயார் செய்ததற்கு காரணம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

மூலிகை ரசம்

மூலிகை ரசம்

உலகில் இதுவரை சந்தித்திராத இந்த கொரோனா அச்சத்திலிருந்து நாம் மீண்டும் வர இந்த மாஸ்க் நானையும் கோவிட் கறியையும் செய்துள்ளோம். இந்த புதிய முன்னெடுப்பை உலகில் முதலில் நாங்கள் செய்ததில் பெருமையடைகிறோம். முக்கியமாக இந்த உணவு பொருட்களை செய்ததற்கு காரணம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த... என அவர் தெரிவித்துள்ளார். இது போல் மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டலில் மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை, கொரோனா வெங்காய போண்டா, மூலிகை ரசம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajasthani traditional restaurant sells variety of dishes which gives awareness of Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X