For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜானுக்கு சென்டினேலீஸ் ஆதிவாசிகள்தான் உயிர்.. அவர்களை மன்னித்துவிட்டோம்.. குடும்பத்தினர் உருக்கம்!

அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனின் உறவினர்கள் தற்போது உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்டினல் தீவில் அமெரிக்கர் உயிரிழப்பிற்கு யார் மீது தவறு?- வீடியோ

    சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனின் உறவினர்கள் தற்போது உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.

    அந்தமானில் உள்ள சென்டினல் தீவிற்கு கடந்த வாரம் செல்ல முயன்று போது ஜான் ஆலன் என்று அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். ஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் தேதி அங்கு சென்றுள்ளார்.

    அப்போது அவர் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை சென்டினேலீஸ் மக்கள் மூன்று நாட்கள் வைத்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அதன்பின் அவரை கொலை செய்துள்ளனர்.

    [இதுதான் விஷயமா.. அந்தமான் ஆதிவாசிகளால் அமெரிக்கர் கொலை செய்யப்பட்டதில் தவறு யார் மீது தெரியுமா? ]

    கடிதம் எழுதியுள்ளனர்

    கடிதம் எழுதியுள்ளனர்

    இந்த நிலையில் ஜானின் குடும்பத்தினர் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளனர். ஜானின் மரண செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தங்கள் குடும்பத்தையே உலுக்கி உள்ளது என்றுள்ளனர்.

    அவருக்கு பிடிக்கும்

    அவருக்கு பிடிக்கும்

    அந்த கடிதத்தில் ஜானின் குடும்பத்தினர், ஜானுக்கு எப்போதும் கடவுள் என்றால் பிடிக்கும். கடவுளை ஜான் அவ்வளவு நேசித்தார். அதற்கு அடுத்தபடியாக அவர் சென்டினேலீஸ் மக்களைதான் நேசித்தார். அவர்களை குறித்து அந்த அளவிற்கு நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்பினார். அதனால்தான் அந்த தீவிற்கே அவர் சென்றார்.

    மன்னித்து விட்டோம்

    மன்னித்து விட்டோம்

    அந்த தீவில் இருக்கும் சென்டினேலீஸ் மனிதர்களை மன்னித்துவிட்டோம். இதில் அவர்களுடைய தவறு எதுவும் கிடையாது. இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று தெரிந்தேதான், ஜான் அந்த தீவிற்கு சென்றார். அந்த மக்கள் மீது குற்றம் சுமத்த எதுவுமில்லை.

    விடுதலை செய்யுங்கள்

    விடுதலை செய்யுங்கள்

    அந்த தீவிற்கு செல்ல ஜானிற்கு உதவிய அனைவருக்கு நன்றி. அவர்களை கைது செய்திருக்க கூடாது. ஜானின் முழு விருப்பதுடன்தான் அவர் தீவிற்கு சென்றார். அதனால் அவருக்கு உதவிய மீனவர்களை கைது செய்திருக்க கூடாது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும், என்றுள்ளனர்.

    உடல் எப்போது

    உடல் எப்போது

    இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஜானின் உடலை மீட்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் ஜானின் உடலை மீட்போம் என்று கூறியுள்ளனர். ஆனால் எப்படி ஜானின் உடலை அவர்கள் மீட்பர்கள், யார் அந்த தீவிற்குள் செல்வார்கள் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.

    English summary
    John Allen: Family forgive Sentinelese tribe who killed American.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X