For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2வது கணவரையும் போட்டு தள்ள பிளான் போட்ட ஜோலி.. 3வது கல்யாணத்துக்கும் ஸ்கெட்ச்.. ஆடிப்போன போலீஸ்

2-வது கணவனையும் ஜோலி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jolly Sensational Kerala Serial Killer Explained : கேரளாவை உலுக்கிய 6 சயனைடு கொலையில் தொடரும் அதிர்ச்சி !-வீடியோ

    கோழிக்கோடு: 2-வது புருஷனையும் போட்டு தள்ளிவிட்டு.. 3-வது புருஷனுக்கு முயற்சி செய்துள்ளார் ஜோலி.. அதனால் 2-வது புருஷனை எப்படி கொல்லலாம் என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தாராம். இந்த பிளானை கேட்டு கேரள போலீசார் ஆடிப்போய் கிடக்கிறார்கள்!

    சொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றார் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொலைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி உள்ளார்.

    jolly planned to kill her 2nd husband also

    சொத்துக்காக கொலை என்றாலும், பெண்களை கண்டாலும் ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள். இவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வயிற்றில் புளியை கரைப்பதுபோல உள்ளது. கணவன் ராய் தாமசுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதை இந்தவிசாரணையில் ஜோலியே ஒத்துக் கொண்டார்.

    அதேபோல, 2வது கணவன் ஷாஜியின் மனைவி லிசியைக் கொலை செய்ய மாத்திரையில் விஷம் கலந்துகொடுத்துள்ளார். இந்த கொலைக்கு அந்த ஷாஜியே உதவினாராம். ஆனால் பாவம்.. ஷாஜியையே போட்டு தள்ளிவிட்டு 3-வது கல்யாணத்துக்கு ரெடி ஆகி உள்ளார் ஜோலி. அந்த புது ஆள் பெயர் ஜான்சன். பிஎஸ்என்எல் அதிகாரியாக இருக்கிறாராம்.

    ஆனால் அதுக்கு ஜான்சன் மனைவி ஒத்துக்கணுமே? அதனால அவரையும் போட்டுத்தள்ள முடிவு செய்துள்ளார் ஜோலி. அதாவது ஜோலியின் 2-வது கணவனையும், ஜான்சனின் மனைவியையும் போட்டுத்தள்ள பிளான் நடந்துள்ளது. இதற்கு அந்த ஜான்சனும் உடந்தை. இதையெல்லாம் கேட்ட போலீசார் இன்னமும் ஜோலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Serial killer Jolly had tried to killed her 2nd husband shahji also to married 3rd husband
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X