For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழல்: லோக்சபா சபாநாயகரிடம் ஜேபிசி அறிக்கை தாக்கல்!

By Mathi
Google Oneindia Tamil News

PC Chacko
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவான ஜேபிசி தமது அறிக்கையை இன்று லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம் தாக்கல் செய்தார்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்களும் இடம் பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதற்கு பி.சி. சாக்கோ தலைமை வகித்தார்.

இக்குழு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டது. இக்குழு தம்மையும் விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வலியுறுத்தி வந்தார். இதையே திமுகவும் வலியுறுத்தியது.

அதேபோல் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் ஜேபிசி விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் இக்குழுவின் இறுதி அறிக்கை இன்று லோக்சபா சபாநாயகர் மீராகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்கெனவே ஜேபிசி வரைவு அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் மீது தவறு இல்லை என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The controversial JPC report, which had given a clean chit to the Prime Minister in 2G spectrum allocation scam, submitted to Lok Sabha Speaker Meira Kumar on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X