For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடூரமான மிருகங்களுக்கு ஒரு பாடம்!... நிர்பயா, ஹாசினிக்கு நீதியை உறுதி செய்த நீதிமன்றங்களுக்கு சபாஷ்

நிர்பயா மற்றும் ஹாசினி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்த வகையில் சிறுமி, பெண்களிடம் கொடூரமான முறையில் நடக்க நினைக்கும் மிருகங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: நிர்பயா மற்றும் ஹாசினி வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் சிறுமி என்றும் பாராமல் குழந்தைகளை பலாத்காரம் செய்யும் மிருகங்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

    தற்போது எங்கு பார்த்தாலும் பெண் குழந்தைகள், பெண்கள் என்றால் அவர்களை ஈவு இரக்கமின்றி பலாத்காரம் செய்துவிட்டு கொடூரமான முறையில் கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

    இதனால் எத்தனையோ பெற்றோர் இன்று பெண் குழந்தைகளின்றி நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில பெற்றோர்களோ தங்களிடம் உள்ள பெண் பிள்ளைகளை பொத்தி பாதுகாப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு சில இளைஞர்கள், முதியவர்களுக்கு கொடூரமான புத்தி வந்துவிட்டது.

    என்னதான் தீர்வு

    என்னதான் தீர்வு

    நாட்டில் இது போல் எத்தனையோ சம்பவங்கள் நடந்தாலும் அவற்றில் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே வெளியே வருவதாகவும் மற்றவை மூடி மறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு என்னதான் தீர்வு என்று பார்க்கும் போது அனைவரின் குரலும் ஒரு விஷயத்தில் ஓங்கி இருக்கிறது.

    தண்டனை கடுமையாக்கப்பட்டால்...

    தண்டனை கடுமையாக்கப்பட்டால்...

    அதுதான் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதாகும். மக்களின் குரல் ஒலிக்க ஒலிக்க நாட்டையே உலுக்கிய இரு வேறு சம்பவங்களில் குற்றவாளிகள் தப்பாமல் நீதியை நிலைநாட்டியுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் வெளியே சென்று விட்டு பேருந்தில் சென்ற போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.

    தூக்கு தண்டனை

    தூக்கு தண்டனை

    இந்த விவகாரத்தில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ராம்சிங் என்ற குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு

    அதுபோல் சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து சிறுமி வெளியே சொல்லாமல் இருக்க கழுத்தை நெரித்துள்ளான் யஷ்வந்த் என்ற பொறியியல் பட்டதாரி. அதோடு அந்த சிறுமியை எங்கோ கொண்டு சென்று எரித்துவிட்டான். இந்த விவகாரத்தில் தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் தஷ்வந்த்.

    தண்டனை

    தண்டனை

    நேற்று உச்சநீதிமன்றம் அளித்தது போலவே இந்த வழக்கிலும் யஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. நிர்பயா, ஹாசினிக்கு நீதி கிடைத்துவிட்டாலும் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. அதோடு கத்துவா விவகாரம் உள்பட ஏராளமான பலாத்கார வழக்குகளிலும் தூக்கு தண்டனை விதித்தால் இனி பெண்களையும், குழந்தைகளையும் வக்கிரமாக நினைக்கும் மிருகங்கள் மனம் மாற வாய்ப்புள்ளது.

    English summary
    Judiciary system upholds the death sentence for rapists in Nirbhaya and Hasini case. Women welcomes the judgement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X