For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூலியன் அசாஞ்சே முதல் அல்கோர் வரை 'நமோ' புகழ் மாலை!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச ஊடகங்களாயினும் சரி.. ஜூலியன் அசாஞ்சே முதல் அல்கோர் வரையிலும் சரி கடந்த வாரம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி புகழ் மாலையே.

இது தொடர்பாக நிதிசென்ட்ரல் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

லத்தீன் போஸ்ட் ஊடகத்தின் மைக்கேல் ஒலேகவுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி என்பது இந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பிடும்படியான முன்னேற்றம் என்கிறார்.

Julian Assange to Al Gore on NaMo chant

அதேபோல் ஐலேண்ட் பிசினஸ் ஊடகத்தில் தேவ் நட்கார்னி மோடி பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவின் முன்னைய நட்பு நாடான ரஷியாவுடன் மட்டுமின்றி பிஜி, மொரீஷியஸ், மாலத்தீவுகள், சூரினாம் மற்றும் கரீபியன் தீவு நாடுகளுடனும் கூட இந்தியா நல்லுறவை வலுப்படுத்தும் காலம் இது என்கிறார்.

மேலும் யுரேசியா ரெவியூவில் க்ளோடியோ லுல்ஸ்கோவும் மோடியின் விஸ்வரூப வெற்றி பற்றியை பதிவு செய்கிறார். டிஸ்ஸிடென்ட் வாய்ஸ் ஊடகத்தில் ஹிரகாம் பீப்லெஸ் என்பவர், இந்தியாவில் மோடி ஆட்சிக் காலத்தில் ஆதிவாசிகளும் தலித்துகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்கிறார்.

அதேபோல் ஆர்கானின் கவுண்டி ரெஜிஸ்டருக்கான கட்டுரையில் ராபர் கயூப்மேன், மோடியின் வெற்றியானது இந்தியாவுக்கு மட்டுமல்ல.. அமெரிக்காவின் ஆசிய பார்வைக்கும் ஊடக்கமளிக்கக் கூடியது என்கிறார். அத்துடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாதையை மோடி பின்பற்றுவார் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி அல்கோர், நரேந்திர மோடியின் வெற்றி ஒரு புரட்சிகரமான முன்னேற்றம் என்று பதிவு செய்கிறார். சஸ்டெயின்பிளாக்கில் ஜே. மாத்யூவோ, மோடி அரசின் சூரிய மின் ஒளி திட்டத்தை புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

அண்மையில் அல்கொய்தா இயக்கமானது காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக புனிதப் போருக்கு அழைப்பு விடுத்தது. இதேபோல் இலங்கையில் புத்த பிக்குகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இப்படி இந்த பிராந்தியம் முழுவதும் மத தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் மோடி அரசு பதவியேற்றிருப்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

என்.ஜி.ஓக்கள் தொடர்பான மத்திய உளவுத்துறையின் அறிக்கையும் கூட சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளன என்று விவரிக்கிறது நிதி சென்ட்ரல் கட்டுரை.

விரிவான கட்டுரையை படிக்க

English summary
The ongoing crisis in Iraq that saw many Indian citizens stranded in that country gripped much of the international attention last week as did the efforts by the Narendra Modi Government to bring them back to India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X