For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை, மும்பை, பெங்களூரில் 40% இளசுகளுக்கே தேசிய கீதம் தெரிந்துள்ளது: என்ன கொடுமைடா!

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: சென்னை, மும்பை மற்றும் பெங்களூரில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இளம் தலைமுறையினரில் வெறும் 10 சதவீதம் பேருக்கு தான் நம் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்தின் சிறப்பு தெரிந்துள்ளது. மேலும் 40 சதவீதம் பேரால் மட்டுமே தேசிய கீதத்தை தவறு இல்லாமல் பாட முடிகிறது

மும்பையில் உள்ள போடர் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் சுதந்திர தினத்தையொட்டி மும்பை, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள இளைஞர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

அதன் முடிவு தான் அதிர்ச்சியை அளிக்கிறது.

கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

சென்னை, மும்பை, பெங்களூரில் உள்ள 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்களிடம் நம் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்தின் சிறப்பு பற்றி கேட்கப்பட்டது. அதில் வெறும் 10 சதவீதம் பேருக்கு தான் அதன் சிறப்பு தெரிந்துள்ளது.

தேசிய கீதம்

தேசிய கீதம்

சென்னை, மும்பை மற்றும் பெங்களூரில் வசிக்கும் இளசுகளில் வெறும் 40 சதவீதம் பேரால் மட்டுமே தேசிய கீதத்தை தவறு இல்லாமல் பாட முடிகிறது என்ற அதிர்ச்சி தகவல் கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

கல்லூரி

கல்லூரி

கல்லூரிகள், மெட்ரோ நிலையங்கள், காபி கடைகளில் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்பட்டது இந்த கணக்கெடுப்பு. மும்பையில் வெறும் 34 சதவீதம் பேருக்கே பகத் சிங் யார் என்று தெரிந்துள்ளது.

இணையதளம்

இணையதளம்

இளைஞர்களிடம் எதை கேட்டாலும் பதில் தெரியவில்லை. இணையதளத்தை நம்பி தான் உள்ளனர். இது வேதனையாக உள்ளது என்று போடர் நிறுவன தலைவர் ஸ்வாதி போபட் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.

English summary
According to a survey, only 10% youths in Chennai, Mumbai and Bengaluru know what the colours of the national flag stand for. Only 40% youths can sing national anthem without mistake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X