For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நாளை விடுதலை!

முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கொல்கத்தா: முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரின் மீது ஊழல் புகார் செய்து இருந்தார். இது பெரிய பிரச்சனையாக மாறியது. இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

Justice CS Karnan to be released tomorrow from Presidency Jail, Kolkata

ஆனால் கர்ணன் மீது உச்சநீதிமன்றம் சில நாளில் அவதூறு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கர்ணன் தலைமறைவானார். நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றார்.

இந்த வழக்கில் இவருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இவரை கண்டுபிடித்து ஜூன் 20ம் தேதி கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைத்தனர்.

இடையில் இவர் பலமுறை பெயில் கேட்டும் நீதிமன்றம் இவருக்கு பெயில் வழங்க மறுத்து வந்தது. உடல்நல குறைவால் இடையில் சில நாட்கள் போலீஸ் கண்காணிப்பில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் இவரது பெயில் கோரிக்கை ஏற்கப்படவேயில்லை.

இந்த நிலையில் தற்போது தண்டனை காலம் முடிந்து நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார்

English summary
Justice CS Karnan, former judge of Calcutta High Court to be released tomorrow from Presidency Jail, Kolkata. He was arrested on 20th June and later found guilty of contempt of Court. Before the arrest at Kovai Restaurant former justice Karnan was hiding at the Lake Symphony resort in Chathamma, at Kochi outskirts from June 11 to 14. CS Karnan has written to Bengal Governor Keshari Nath Tripathi seeking parole for many time but he hasn't got.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X