For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்- வீடியோ

    டெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றார். வட கிழக்கு மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதியாவார். அவருக்கான பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

    ஏற்கெனவே இப்பதவியில் இருந்த தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவர் தனது பதவியில் முக்கிய வழக்குகளான ஓரின சேர்க்கை, ஆதார், கள்ளக்காதல், சபரிமலைக்கு பெண்கள் அனுமதி உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

    ustice Ranjan Gogoi sworn-in as the Chief Justice of India

    இந்நிலையில் தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.

    பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதன் தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

    [காந்தியே "இவர்" ஆட்சியைதான் விரும்பியிருப்பார்.. காந்தியின் செயலாளர் பரபரப்பு தகவல்கள்!]

    உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வெளிப்படையாக குற்றம்சாட்டிய நீதிபதிகளில் கோகாயும் ஒருவர்.

    English summary
    Justice Ranjan Gogoi will take over as the 46th Chief Justice of India today. He takes over from Justice Dipak Misra who retired on October 2 after passing a string of verdicts that included the constitutional validity of Aadhaar, adultery law, the Sabarimala Temple issue among others.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X