For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான ராஜேஷ்குமார் அக்ரவால், நதலபட்டி வெங்கட ரமணா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Justice Rajesh Kumar Agrawal and Justice Nuthalapati Venkata Ramana sworn in as Supreme Court judges
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ராஜேஷ்குமார் அக்ரவால், நதலபட்டி வெங்கட ரமணா ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய ராஜேஷ்குமார் அக்ரவால் மற்றும் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய நதலபட்டி வெங்கட ரமணா ஆகியோர் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் மூத்த வக்கீலான ராஜேஷ்குமார் அக்ரவால், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும், தலைமை நீதிபதியாக நவம்பர் 23-ந்தேதியும் பொறுப்பேற்றார்.

இதைப்போல கடந்த 1983-ம் ஆண்டு முதல் வக்கீலாக பணியை தொடங்கிய நதலபட்டி வெங்கட ரமணா, கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2013-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி முதல் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுடன் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

English summary
Justice Rajesh Kumar Agrawal and Justice Nuthalapati Venkata Ramana were sworn in the judges of the Supreme Court here on Monday. With their swearing-in, for the first time in several years the Supreme Court will have its full strength of 31 judges. Prior to his elevation as the judge of the apex court, Justice Agrawal, 61, was the chief justice of the Madras High Court. He became the chief justice in October 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X