For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுதாகர் நியமனம்

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜம்மு காஷ்மீர் பொறுப்பு தலைமை நீதிபதியான சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான ராமலிங்கம் சுதாகர் 2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அம்மாநில தலைமை நீதிபதி பதார் துரேஷ் அகமது ஓய்வு பெற்றதால் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் சுதாகர்.

Justice Sudhakar posted as CJs of Manipur

இந்த நிலையில் மணிப்பூர் மாநில தலைமை நீதிபதி அபிலாஷா குமாரி அண்மையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல மேகாலயா தலைமை நீதிபதியாக ஜம்மு காஷ்மீர் நீதிபதி யாகூப் மிர், பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா முராரி, நியமிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Supreme Court Collegium has recommended Justice Ramalingam Sudhakar as Chief Justice of Manipur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X