For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வெளம்பரம்.. முகாமில் தூங்கிய படத்தை டிவிட்டரில் போட்டு வாங்கிக் கட்டிய மத்திய அமைச்சர்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோட்டயம்: கோட்டயம் நிவாரண முகாமில் தூங்கிய படத்தை டுவிட்டரில் போட்டு மத்திய அமைச்சர் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

கேரளத்தில் கடந்த சில நாட்களுக்கு பேய் மழை பெய்தது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மழையால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 10 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை மாநில அரசு அமைத்தது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் கே எல் அல்போன்ஸ் கோட்டயத்தில் செங்கனாச்சேரியில் உள்ள நிவாரண முகாமில் நேற்று தூங்கினார்.

தூங்காமல் இருந்தனர்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் நேற்று இரவு செங்கனாச்சேரி நிவாரண முகாமில் தூங்கினேன். பெரும்பாலான மக்கள் நாளை என்பது நிச்சயமற்றதாக உள்ளதை எண்ணி தூங்காமல் இருந்தனர் என்று குறிப்பிட்டு அந்த டுவீட்டை அமித்ஷா, இந்திய பாஜக, கேரள பாஜக, பியூஷ்கோயல், நரேந்திர மோடி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

ஆழ்ந்த உறக்கம்

இந்நிலையில் இதை டுவிட்டரில் பதிவு செய்த பிறகு நெட்டிசன்களிடம் அமைச்சர் வாங்கிக் கட்டி கொண்டு வருகிறார். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் கேட்கையில் நீங்கள் தூங்கும்போது பெரும்பாலான மக்கள் தூங்கவில்லை என்பது எப்படி தெரியவந்தது. நீங்கள் ஆழ்ந்த உறக்கம் கொண்டீர்களா என்று கேட்டுள்ளார்.

விளம்பரம்

மற்றொரு டுவீட்டில் சார் இதென்ன ஜோக்கா? இந்த மாதிரி நீங்கள் ஷோ காண்பிக்க தேவையில்லை. இதுபோன்ற அரசியல் விளம்பரங்களை கேரள மக்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மத்திய அமைச்சராக உள்ள நீங்கள் இதுபோன்ற சூழலில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். முதலில் அதை செய்யுங்கள்.

மீட்பு நடவடிக்கையின் போது எங்கே

உங்கள் தியாகங்களை உங்கள் மாஸ்டர்களுக்கு காட்ட வேண்டுமென்றால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஈமெயில் அனுப்புங்கள். சமூக வலைதளங்களை தவிர்த்து மீட்பு நடவடிக்கை நடந்த இடங்களில் உங்களை நாங்கள் பார்த்ததே இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

தரம்தாழ்ந்த விளம்பரம்

அல்போன்ஸ் உங்களுக்கு மிகவும் தரம் தாழ்ந்த மனநிலை. உதவிக்காக காத்திருக்கும் மக்களுக்கு உதவியை செய்து நல்ல பெயரை பெறுங்கள். இதுபோல் தரம் தாழ்ந்த விளம்பரம் மூலம் நல்ல பெயர் வாங்க பார்க்காதீர்கள் என்கிறார் இந்த வலைஞர்.

English summary
Alphons tweeted a picture of him at a relief camp on Wednesday and said that he slept at a relief camp in Changanacherry in the Kottayam district, and added that "most people didn't sleep, thinking of an uncertain tomorrow."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X