For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை... செய்தியாளர் சந்திப்பில் தேம்பி அழுத பாஜக தலைவர்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்று முன்னாள் எம்எல்ஏ ஷஷில் ஜி நமோஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கண்ணீர் விட்ட பாஜக பிரமுகர்

    பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக வெளியிட்ட 2 வேட்பாளர் பட்டியலிலும் தனது பெயர் இடம்பெறவில்லை என்று முன்னாள் எம்எல்ஏ ஷஷில் ஜி நமோஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பில் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலே பல அரசியல் கட்சியினருக்கு வேதனையை அளித்துள்ளது. அவர்களின் பெயர் அல்லது ஆதரவாளர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லையே என்ற வேதனை தான்.

    Ktaka BJP leader in tears during press conference for not announced as candidate

    பாஜக முன்னாள் எம்எல்ஏ ஷஷில் ஜி நமோஷி இது போன்ற அதிருப்தியில் உள்ள அரசியல்வாதிகளில் ஒருவர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது தான் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்று ஷஷில் கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பாஜக வெளியிட்ட 2வது வேட்பாளர் பட்டியலிலும் தனது பெயர் இடம்பெறவில்லை என்ற ஆதங்கத்தில் ஷஷில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஷஷில் தனக்கு குல்பர்கா தொகுதி ஒதுக்கப்படும் என்று காத்திருந்தார், ஆனால் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளராக சிபி படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பின் போது எதையோ சொல்ல வந்த ஷஷில் பின்னர் கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஷஷிலை சமாதானப்படுத்தினர்.

    ஷஷில் நமோஷி கலபுர்கியின் துணை மேயராகவும், 12 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். குல்பர்காவின் இரண்டு தொகுதியில் ஒரு தொகுதி கிடைக்கும் என்று ஷஷில் நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் முதலில் வெளியான பட்டியலில் குல்பர்கா தக்ஷின் தொகுதிக்கு தத்தாத்ரே படேல் ரெவூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை வெளியான இரண்டாவது பட்டியலிலும் அவருடைய பெயர் இடம்பெறாததால் அவர் நம்பிக்கை உடைந்து போனதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    காங்கிரஸ் கட்சியில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமையன்று காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Shashil G Namoshi, a former MLA bursted out and cried in Press conference for not announced as candidate even in BJp's second list : Karnataka elections 2018.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X