For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: ஆடு, மாடுகளை தொடர்ந்து இலவச நாட்டுக்கோழி திட்டம்- முதல்வர் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இலவச ஆடு, மாடு வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை தொடர்ந்து இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். சென்னை தவிர பிற மாவட்டங்களில் இலவச நாட்டு கோழி வழங்கப்படும். சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

Edappadi

Newest First Oldest First
6:51 PM, 6 Jun

காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம்
நீர் வளத்துறை ஆணையர் மசூத் உசேன் தலைவராக நியமனம்
6:23 PM, 6 Jun

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

வரும் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

5:52 PM, 6 Jun

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக அமைக்க கோரிக்கை

தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

5:04 PM, 6 Jun

ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் - ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி

டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி

தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம்- ராம்நாத்

தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் - ராம்நாத்

4:29 PM, 6 Jun

அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடான சென்னை
எழும்பூர், அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளம்
மழை, வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
4:28 PM, 6 Jun

காலாவை கர்நாடகாவில் வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்
கர்நாடகாவில் சி நிறுவனம் காலாவை வெளியிட உள்ளது
சி நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் கன்னட அமைப்புகள் புகுந்து தகராறு
அலுவலகத்தில் இருந்த காலா பட போஸ்டர்கள் கிழிப்பு
காலா படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம்
3:05 PM, 6 Jun

பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை
திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை
சென்னையிலும், புறநகர்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை
ராமாவரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை
2:58 PM, 6 Jun

குமாரசாமியை சந்தித்த கமலுக்கு வீரவாள், ஏர்கலப்பை பரிசு
விவசாயிகள் சங்கத்தினர் குமாரசாமியை சந்தித்த கமலுக்கு வரவேற்பு
2:38 PM, 6 Jun

கர்நாடக அமைச்சர்கள் பதவியேற்பு
டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா அமைச்சர்களானார்கள்
காங்கிரஸில் 22 பேருக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் 12 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பு
சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி. தேவெ கெளடாவும் அமைச்சரானார்
2:25 PM, 6 Jun

சென்னையின் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது

சென்னை மெரினா, பூவிருந்தவல்லி, மாங்காடு ஆகிய பகுதிகளில் திடீர் மழை

சென்னை போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டம்

2:04 PM, 6 Jun

நீட் தேர்வு - சென்னை கீழ்ப்பாக்கத்தில் மாணவி மாயம்
தேர்வு முடிவை அறிய வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி கோடீஸ்வரி மாயம்
பெற்றோரிடம் பேசிய மாணவி தன்னை விட்டு விடுமாறு கூறி போனை ஆப் செய்துவிட்டார்
1:57 PM, 6 Jun

தூத்துக்குடி அருகே கொட்டப்பட்ட வெளிநாட்டு கழிவுகள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன
மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே மின்னணு மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன
சிங்கம் 3 பட பாணியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் மக்கள் அதிர்ச்சி
1:52 PM, 6 Jun

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முன் ஜாமீன்
சீமானுக்கு சென்னை ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியதாக வழக்கு
காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன்
சீமான் மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும்
1:27 PM, 6 Jun

கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
1:11 PM, 6 Jun

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில் மறியல்
மாணவர் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம்
12:53 PM, 6 Jun

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டிஸ்
துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்க உத்தரவு
3 தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
வழக்கறிஞர் அமுதநாதன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
11:49 AM, 6 Jun

மாணவி பிரதீீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
11:45 AM, 6 Jun

இலவச ஆடு, மாட்டை தொடர்ந்து இலவச நாட்டு கோழி-முதல்வர் அறிவிப்பு

சென்னை தவிர பிற மாவட்டங்களில் இலவச நாட்டு கோழி வழங்கப்படும்

சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

வேலூர், தஞ்சையில் புதிதாக பால் பண்ணை- முதல்வர்

ரூ.100 கோடி செலவில் மாதவரம் பால் பண்ணை விரிவாக்கம்- முதல்வர் அறிவிப்பு

11:38 AM, 6 Jun

காலா படத்துக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்

ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கதை தன்னுடையது என்று கூறி வழக்குப் போட்டிருந்தார் ராஜசேகரன்

வழக்கில் முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து

11:10 AM, 6 Jun

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார் சிதம்பரம்
11:00 AM, 6 Jun

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை

சத்தியமூர்த்தி மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை- சென்னை ஹைகோர்ட்

1991-96-ஆம் ஆண்டு தமிழக அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி

சத்தியமூர்த்தி ரூ.83 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு

11:00 AM, 6 Jun

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை
சத்தியமூர்த்தி மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை- சென்னை ஹைகோர்ட்
1991-96-ஆம் ஆண்டு தமிழக அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி ரூ.83 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு
10:27 AM, 6 Jun

புழல் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை
10 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த நிலையில் விடுதலை
நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை
10:25 AM, 6 Jun

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 6 பேருக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது
10:24 AM, 6 Jun

திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும், காவிரி பிரச்சினைக்காக காலாவை கர்நாடகாவில் தடை விதிப்பது ஏற்புடையது இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
10:23 AM, 6 Jun

நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் தான் மாணவர்களை குழப்புகின்றனர்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

நீட் விவகாரத்தில் அரசியலை புகுத்தி மாணவர்களின் நம்பிக்கையை குலைக்காதீர்கள்

தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழிசை கோரிக்கை

10:23 AM, 6 Jun

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் குடும்பத்தை நேரில் சந்தித்தார் விஜய்

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இரவில் சென்றார் விஜய்

தூத்துக்குடி சென்ற விஜய் நள்ளிரவில் பைக்கில் சென்று பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்தார்

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தோரைப் பார்க்கிறார் விஜய்

10:22 AM, 6 Jun

காலா திரைப்பட தியேட்டர்களுக்கு கர்நாடக முதல்வர் பாதுகாப்பு தருவார்- ரஜினி நம்பிக்கை

போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் ரஜினிகாந்த்

ஹைகோர்ட் ஆர்டர் கொடுத்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்- ரஜினி

10:22 AM, 6 Jun

கர்நாடகாவில் இன்று அமைச்சரவை விரிவாக்கம்

அமைச்சர்கள் பெயர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை

10:22 AM, 6 Jun

தற்கொலை செய்த மாணவி பிரதீபா உடல் இன்று அடக்கம்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்தவர் பிரதீபா

READ MORE

English summary
Kaala will be released worldwide on tomorrow, and the actor Rajinikanth requet Kannada organization to help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X