For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாபவன்மணி மரணம்: 6 தனிப்படைகள் அமைத்தும்..வழக்கை முடிக்கத் திணறும் காவல்துறை

By Manjula
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கலாபவன் மணி மரணத்தில் தொடரும் மர்மங்களால், வழக்கை முடிக்க முடியாமல் காவல்துறை தொடர்ந்து தடுமாறி வருகிறது.

கடந்த மார்ச் 6 ம் தேதி கல்லீரல் பிரச்சினை காரணமாக நடிகர் கலாபவன் மணி கொச்சியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

45 வயதில் மணி இறந்து போனது தென்னிந்தியத் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது திட்டமிட்ட கொலை என்று அவரின் மனைவி மற்றும் சகோதரர் தொடர்ந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து தடுமாறி வருகிறது.

கலாபவன் மணி

கலாபவன் மணி

மணியின் மரணம் இயற்கையானது அல்ல என்று அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அவரது மரணத்தை சந்தேக மரணம் என்று மாற்றி காவல்துறை விசாரிக்க ஆரம்பித்தது.

அவுட்ஹவுஸ் சீல்

அவுட்ஹவுஸ் சீல்

மிக ஆபத்தான கட்டத்தில் மணியின் அவுட் ஹவுஸில் இருந்துதான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் சாலக்குடியில் உள்ள அவரது அவுட் ஹவுஸை பூட்டி அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மோகன்லால்

மோகன்லால்

மணியின் மரணத்திற்கு மோகன்லால் கருத்து தெரிவிக்கவில்லை என்று மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையால் பாதிக்கப்பட்ட மோகன்லால் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சாபு சிரில்

சாபு சிரில்

சில நாட்களுக்கு முன்னர் மணியின் மரணத்திற்கு நடிகர் தரிகிட சாபு காரணம் என்று, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதுகுறித்து அவர் நான் மணியை சந்தித்து பேசியது உண்மைதான், ஆனால் நாங்கள் மது எதுவும் அருந்தவில்லை என்று விளக்கம் அளித்தார்.தரிகிட சாபு முதன் முதலாக தயாரித்த படம் கிடப்பில் போடப்பட்டதால், மணி மற்றும் சாபுவிற்கிடையே சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனைவி நிம்மி

மனைவி நிம்மி

என் கணவரின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிபடுத்த வேண்டும் என்று அவரது மனைவி நிம்மி கேரள அரசுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் மன உறுதி கொண்ட என் கணவர் ஒருபோதும் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்றும் அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் விரும்பினால் கலாபவன் மணியின் மரணத்தை உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை செய்யத் தயார், என கேரளா முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

குளோர்பைரிபோஸ்

குளோர்பைரிபோஸ்

அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால், கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதனால் மணியின் உடலில் கண்டறியப்பட்ட குளோர்பைரிபோஸ் என்னும் ரசாயனம், அவரது பண்ணை வீட்டில் கைப்பற்றிய ரசாயனப் பொருட்களுடன் ஒத்துப் போகிறதா? என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் தற்போது இறங்கியுள்ளனர்.

6 தனிப்படை

6 தனிப்படை

இதற்காக ஐ.ஜி. அஜீத்குமார் உத்தரவுப்படி 6 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவியாளர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரையும் இந்த விசாரணை வளையத்திற்குள் போலீஸ் கொண்டு வந்துள்ளது.

வாலிபர்

வாலிபர்

தீவிர விசாரணையில் கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்த ஒரு வாலிபர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். இவர் அடிக்கடி கலாபவன் மணியின் பண்ணை வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.பண்ணை வீட்டில் மது விருந்து நடப்பதற்கு சில நாட்கள் முன்பும், மது விருந்து நடந்த மறுநாளும் அவர் அங்கு வந்துள்ளார். மேலும் கலாபவன்மணியின் உதவியாளர்களுக்கும் அந்த வாலிபருக்கும் தொடர்பு இருந்து உள்ளது. இதனால் பூச்சி மருந்தை அவர் கொண்டு வந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மாமனார்

மாமனார்

கலாபவன் மணியின் மனைவி நிம்மியைத் தொடர்ந்து, மாமனார் சுதாகரனை சாலக்குடி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மணிக்கும் அவரது மனைவிக்கு சுமூகமான சூழ்நிலை நிலவியதா? பணம் சம்பந்தமாக பிரச்சினை ஏதும் ஏற்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தவும் போலீஸ் திட்டமிட்டுள்ளது.

கலாபவன் மணி இறந்து இன்றுடன் 17 நாட்கள் முடிவுற்றுள்ளன. ஆனால் இதுவரை அவரின் மரணத்திற்கான உண்மைக் காரணம் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kalabhavan Mani Death, the police continue Faltering to be unable to Complete the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X