For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை வரிசையில் இங்கிலாந்தில் பிரபலமடைந்து வரும் ‘காளி பூஜை’

Google Oneindia Tamil News

கொல்கத்தா : சரஸ்வதி பூஜை, துர்கா பூஜை போன்றே காளி பூஜைக் கொண்டாட்டங்களும் இங்கிலாந்தில் பிரபலமடைந்து வருகிறது.

ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமின்றி மற்ற கண்டங்களிலும் துர்கா பூஜைக் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 1960களில் இங்கிலாந்தில் குடியேறிய பெங்காலி மக்களால் அங்கு துர்கா பூஜை கொண்டாட்டங்கள் துவங்கப்பட்டன. நாளடைவில் இக்கொண்டாட்டங்கள் படிபடியாக ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமின்றி மற்ற கண்டங்களிலும் பிரபலமடையத் தொடங்கின.

தற்போது இங்கிலாந்திலும் காளி பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் மேற்கு வங்கத்தில் நடைபெறுவது போன்றே நடைபெறுகின்றன. இத்தகைய திருவிழா நிகழ்ச்சிகளில் அப்பகுதியில் வாழும் பிற இனத்தவரும் பங்கு பெற்று சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது.

கலாச்சார நிகழ்ச்சிகள்....

கலாச்சார நிகழ்ச்சிகள்....

மத்திய லண்டனிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது ரீடிங் பகுதி. இப்பகுதியில் வசித்துவரும் பெங்காலிகள் இதுபோன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக சன்ஸ்கிருதி என்ற லாப நோக்கில்லாத அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளனர்.

சன்ஸ்கிருதி அமைப்பு....

சன்ஸ்கிருதி அமைப்பு....

கடந்த வருடம் இந்த சன்ஸ்கிருதி அமைப்பின் மூலம் இங்கிலாந்தில் காளி பூஜை விழா நடத்தப் பட்டது. அங்குள்ள டிரன்க்வெல் மேன்ஷன் ஹவுஸ் இந்த பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

பிரசாதங்கள்....

பிரசாதங்கள்....

குமர்துலியில் இருந்து புரோத்யுத் பால் மூலம் வடிவமைக்கப்பட்ட காளி சிலையை நிறுவி அங்கிருந்தோர் வழிபட்டனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இந்தப் பூஜையின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

காளி பூஜை...

காளி பூஜை...

இந்த வருடம் ஷின்பீல்ட் கிராஞ் பகுதியில் காளி பூஜை நடைபெற உள்ளது. விழாவிற்கான சிலை குமர்துலியில் இருந்து கோரா சந்த் பால் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சுமார் 600க்கும் மேற்பட்டோர் இந்தப் பூஜையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வானவேடிக்கை....

வானவேடிக்கை....

பாரம்பரியமான ஒரு பெங்காலிய விழாவாக வானவேடிக்கைகளுடன் இந்தப் பூஜையைக் கொண்டாட சன்ஸ்கிருதி அமைப்பினர் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

விழா ஏற்பாடு....

விழா ஏற்பாடு....

ஏற்கனவே, துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை இந்தப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே காளி பூஜையையும் இங்கு கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவரான அனுராதா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
After the first lot of Bengalis settlers in the UK began Durga Puja in the 1960s, which gained popularity not only in Europe and America but other continents as well, non-resident Bengalis in the island nation are now organizing Kali Puja in a big way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X