For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் முதலிடம் யார் தெரியுமா? எவ்வளவு மார்க் தெரியுமா?

நீட் தேர்வில் 691 மதிப்பெண் பெற்று கல்பனா குமாரி என்ற மாணவி நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு முடிவுகள் வெளியானது- வீடியோ

    டெல்லி: நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் பெற்று கல்பனா குமாரி என்ற மாணவி நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

    மே 6ஆம் தேதி நடந்த இந்த நீட் தோ்வு நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர்.

    இந்தநிலையில் தேர்வு முடிவு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே இன்று பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மொத்தம் 720 மார்க்

    மொத்தம் 720 மார்க்

    இந்நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது

    தகுதி மதிப்பெண்

    தகுதி மதிப்பெண்

    ஓசி பிரிவுக்கு 119 மதிப்பெண்ணும், ஓபிசி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    மாணவி முதலிடம்

    மாணவி முதலிடம்

    இந்நிலையில் நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் நாட்டிலேயே முதல் மதிப்பெண் என அறிவிக்கப்பட்டது. கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

    உயிரியியலில் 360க்கு 360

    உயிரியியலில் 360க்கு 360

    அவர் இயற்பியலில் 180க்கு 171 மதிப்பெண்ணும், வேதியியலில் 180க்கு 160 மதிப்பெண்ணும் விலங்கியல் மற்றும் உயிரியியலில் 360க்கு 360 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

    English summary
    Neet exam results have been declared. Kalpana kumari is the topper with 691 marks out of 720.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X