For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எந்த தொகுதிக்கு, யார் கூட கூட்டணி அமைச்சிருக்கிறார் கமல்ஹாசன் பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    மமதா பானர்ஜியுடன் கமல்ஹாசன் சந்திப்பு

    சென்னை: மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவித்தார்.

    கொல்கத்தாவிற்கு, இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான, மமதா பானர்ஜியை சந்தித்தார்.

    Kamal Haasan party MNM and Mamata Banerjees Trinamool makes alliance

    தனது குறுகியகால அரசியல் பயணத்தில் மூன்றாவது முறையாக மம்தாவை சந்தித்த கமல்ஹாசன், நாட்டு நடப்பு உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார் கமல்ஹாசன்: இன்றைய ஆலோசனை மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அந்தமான் லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவு மேலும் பலப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

    தலைவன்னா போட்டியிட்டேதான் ஆகணுமா.. வித்தியாசமான பாதையில் கமல்ஹாசன்! தலைவன்னா போட்டியிட்டேதான் ஆகணுமா.. வித்தியாசமான பாதையில் கமல்ஹாசன்!

    அந்தமானில் போட்டியிடும் எங்கள் கூட்டணி வேட்பாளருக்காக நான் அங்கு சென்று பிரசாரம் செய்வேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
    அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கு ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியின் தற்போதைய லோக்சபா உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பிஷ்னு படா ராய் பதவி வகிக்கிறார்.

    English summary
    Kamal Haasan party makkal needhi maiam and Mamata Banerjee's Trinamool makes alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X