For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணோம்.. காணோம்.. கமல்நாத்தை காணோம்.. தகவல் தந்தால் ரூ21,000 சன்மானம்.... ம.பியில் பரபரப்பு போஸ்டர்

Google Oneindia Tamil News

சிந்த்வாரா: மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவர் மகன் நகுல் நாத் ஆகியோரை காணவில்லை எனவும் இருவரையும் கண்டுபிடித்து தருவோருக்கு ரூ21,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதி கமல்நாத்தின் கோட்டை. 1980களில் இருந்து பல லோக்சபா தேர்தல்களில் வென்று எம்.பியானவர் கமல்நாத். இங்கிருந்ததான் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மகன் நகுல்நாத் லோக்சபா எம்.பி.யாகவும் தேர்வானார்.

Kamal Nath, Nakul Nath Missing From Constituency

கொரோனா பாதிப்பு தொடக்கத்தின் போது ஆட்சியை பறிகொடுத்த கமல்நாத் அதன்பின்னர் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனை சுட்டிக்காட்டும் விதமாக அவரையும் அவரது மகனையும் காணவில்லை என அத்தொகுதி மக்களே போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

கொரோனா லாக்டவுனால் மக்கள் துயரத்தில் இருக்கும் நிலையில் எந்த ஒரு நிவாரணப் பணியிலும் கமல்நாத் ஈடுபடவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் தந்தையையும் மகனையும் பற்றி தகவல் தந்தால் ரூ21,000 சன்மானம் தருவோம் என்றும் அந்த போஸ்டரில் அறிவித்திருக்கின்றனர்.

ஜூன் 1 முதல் நாள்தோறும் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல்ஜூன் 1 முதல் நாள்தோறும் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல்

போபாலில் கடந்த வாரம் பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூரை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த்து குறிப்பிடத்தக்கது.

English summary
Posters proclaiming senior Congress leader Kamal Nath and his son Nakul Nath, a Lok Sabha MP, are missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X