For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் "விஸ்வரூபம்"!

Google Oneindia Tamil News

டெல்லி: கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், யாரைக் கவர்ந்ததோ இல்லையோ, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்து விட்டதாம். இந்தப் படம், அல் கொய்தா அமைப்பின் இந்திய வருகையை அறிவிக்கும் படமாக அமைந்து விட்டதாகவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் கருதினார்களாம்.

குறிப்பாக கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய இப்படத்தை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான ரியாஸ் பத்கல் அதிகம் விரும்பிப் பார்த்தாராம். அவருக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம்.

Kamal’s Vishwaroopam made Riyaz Bhatkal happy- The IM split explained

2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது இந்தியக் கிளை குறித்த அறிவிப்பை அல் கொய்தா வெளியிட்டது. இருப்பினும் அந்த அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் அல் கொய்தாவின் வருகைக்கு முன்பாகவே அதுகுறித்து குறிப்பிட்டுள்ளார் ரியாஸ். விஸ்வரூபம் படத்தை மேற்கோள் காட்டி இதைக் கூறியிருந்தார் ரியாஸ்.

ஒரு நேரத்தில் வலிமையான அமைப்பாக திகழ்ந்த இந்தியன் முஜாஹிதீன் தற்போது பிளவுபட்டு விட்டது. ஒரு பிரிவு அல் கொய்தாவுக்கும், இன்னொரு பிரிவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் ஆதரவாக திகழ்கிறது.

2013ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ரியாஸ் பத்கல், பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவில் இருந்த தனியால் என்ற தனது கூட்டாளியுடன் சாட் செய்துள்ளார். அப்போது தான் விஸ்வரூபம் படம் பார்த்ததாக கூறியுள்ளார் ரியாஸ். அதாவது மார்ச் 25ம் தேதி அப்படத்தைப் பார்த்ததாகவும், படத்தின் முடிவில், இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டது குறித்த வசனம் இடம் பெற்றதாகவும், அது உண்மைதான் என்றும், விரைவில் அது நடக்கப் போவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார்.
அன்றுதான் விஸ்வரூபம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது உரையாடலின்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ளவர்களை விட சிறந்தவர்கள் என்றும் பாராட்டியுள்ளார் ரியாஸ்.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் குறித்தும், பாகிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நிலவரம் குறித்தும் பேசியுள்ளார் பத்கல். இந்தியாவில் உள்ள நமது அமைப்பினர் அனைவரும் ஒன்று திரண்டு, நேட்டோ படையினருக்கு எதிராக, அல் கொய்தாவுக்கு ஆதரவாக தோள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் பத்கல்.

மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும். அல் கொய்தாவுடன் இணைய வேண்டும் என்றும் பத்கல் கூறியுள்ளார்.

அதேபோல தனது சகோதரரான யாசின் பத்கலுடன் (அவர் பின்னர் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விட்டார்) பேசிய பேச்சு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. யாசினுடன் நடந்த உரையாடலின்போது ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள் என்று காட்டமாக வர்ணித்துள்ளார் ரியாஸ் பத்கல்.

தன்னை ஐஎஸ்ஐ மோசமாக நடத்தியதாகவும், தான் அல் கொய்தாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார்.

அதேபோல பாகிஸ்தான் தலிபான்களை அடி முட்டாள்கள் என்றும் அவர் வர்ணித்துள்ளார். 2013ம் ஆண்டு மே 11ம் தேதி தனது இந்திய அமைப்பினருடன் நடந்த பேச்சின்போது, பாகிஸ்தான் தலிபான்கள் அடி முட்டாள்களாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், இன்று காலை 5 குண்டுவெடிப்புகளை தெஹரிக் இ தலிபான்கள் நடத்தியுள்ளனர். இவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் முட்டாள்களாக உள்ளனர். அவர்களுடன் இணைய நான் விரும்பவில்லை. நான் அல் கொய்தாவுடன் இணையவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரியாஸ்.

இன்னொரு உரையாடல் ரியாஸுக்கும், சுல்தான் அர்மார் என்பவருக்கும் இடையே நடந்ததாகும். இந்த அர்மாரும், ரியாஸின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர்தான். அவர் அல் கொய்தாவுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்திருந்தார். காரணம், எப்படியும் ஒரு நாள் அல் கொய்தா அமைப்பானது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு ஆதரவாக மாறி விடும். எனவே ஐஎஸ் அமைப்பில் சேருவதே நல்லது என்று அவர் கூறியிருந்தார்.

மேலும் ஐஎஸ் அமைப்புதான் சுத்தமான ஜிஹாத்தை நடத்தி வருவதாகவும், அதனுடன் இணைவதே சரியானது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரியாஸுக்கும், அர்மாருக்கும் இடையே மோதல் முற்றி அதன் பின்னரே இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு உடைந்தது.

English summary
Vishwaroopam, the Kamal Hassan starrer was an instant draw with operatives of the Indian Mujahideen. They felt that this movie had made a very important announcement about the arrival of the Al-Qaeda in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X