For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே.வங்க முதல்வராக 2-வது முறையாக மமதா பானர்ஜி பதவியேற்பு; பூடான் பிரதமர்,மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வராக 2-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி இன்று பதவியேற்றார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேற்கு வங்க சட்டசபைக்கு 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது

இன்று அம்மாநிலத்தின் முதல்வராக 2-வது முறையாக கொல்கத்தாவில் மமதா பானர்ஜி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.என். திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Kanimozhi to attend Mamata's swearing-in ceremony

மமதா பானர்ஜி பதவியேற்பு விழாவில் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, அசோக் ஜி. ராஜூ, பாபுலால் சுப்ரியோ, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவை இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளன.

English summary
DMK MP Kanimozhi will be among those in attendance today during the swearing-in ceremony of Mamata Banerjee as West Bengal chief minister for the second consecutive term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X