For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீதாராம் யெச்சூரி மீதான இந்து சேனா தாக்குதல் - கனிமொழி கடும் கண்டனம்

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : கட்சி அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்து சேனா அமைப்பினரால் தாக்கப்பட்டதற்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் பத்திரிக்கையாளர்கள் போல நுழைந்த 2 பேர் திடீரென மார்க்சிஸ்ட் கட்சி ஒழிக, இந்து சேனா வாழ்க என்று முழக்கமிட்டனர். மேலும் சீதாராம் யெச்சூரியை தாக்கப் பாய்ந்தனர்.

 Kanimozhi condemns attack on sitaram yechury

அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்து இரண்டு பேரையும் கடுமையாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கட்சி அலுவலகத்திற்குள்ளே புகுந்து மார்க்சிஸ்ட் மூத்தத் தலைவரை தாக்க முற்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மூத்தத் தலைவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நாட்டை வேறுபட்ட கருத்துகள் மற்றும் சுதந்திரம் இன்றி கட்டமைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

English summary
DMK MP Kanimozhi condemns the attack of Sitaram Yechury in her twitter page and also adds We cannot build a nation without freedom and the right to differ.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X