For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கங்கை கரையில் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டு இடிக்கப்படுகிறது.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து தள்ள திட்டம்

    கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரிலுள்ள கங்கை நதிக்கரை படிக்கட்டில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தடுமாறி கீழே விழுந்தார். இதன்பிறகு விழித்துக் கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம், அந்த படிக்கட்டின் குறைபாட்டை சீரமைக்க முடிவு செய்துள்ளது.

    கங்கை ஆய்வுக்காக சென்றபோது மோடி திடீரென தடுமாறி இப்படி விழுந்தார். நல்லவேளையாக அவருக்கு அடிபடவில்லை. பாதுகாவலர்கள் உடனடியாக அவர் எழுந்திருக்க உதவி செய்தனர்.

    Kanpur Ganga river steps where Narendra Modi falls will get re construct

    69 வயதானபோதிலும், நரேந்திர மோடி மிகவும் ஆரோக்கியமானவர். தினமும் யோகாசனம் செய்பவர். மிகவும் வேகமாக நடைபோடக் கூடியவர். அப்படி இருந்தும், அவர் படிக்கட்டில் எப்படி தடுமாறினார் என்ற கேள்வி எழுந்தது.

    அதிகாரிகள், அந்த படிக்கட்டுகளை ஆய்வு செய்தபோது, மோடி தடுமாறிய படிக்கட்டு மட்டும், மற்றப் படிக்கட்டுகளைவிடவும், அளவில் மாறுபட்டு, உயரமாக இருப்பது தெரியவந்தது.

    இத்தனை நாட்களாக அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில், இப்போது, அதை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளளது.

    அடல் காட் என்று அழைக்கப்படும், கங்கைத் துறை பகுதியிலுள்ள இந்த படிக்கட்டு, கட்டுமான ஏஜென்சி மூலமாக சரி செய்யப்படும். பிற படிக்கட்டுகள் உயரத்திற்கு, இது மாற்றப்படும் என்று மாவட்ட கலெக்டர் போப்டே தெரிவித்துள்ளார். எனவே இப்போதுள்ள அந்த படிக்கட்டு இடிக்கப்படும்.

    English summary
    The district authorities have decided to reconstruct the stairs of Atal ghat where PM Modi fall down recently.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X