For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொண்ணு கேரக்டர் எப்படி?.. காணாமல் போன சிறுமியை தேட மாற்றுத்திறனாளியிடம் டீசலுக்கு காசு கேட்ட போலீஸ்!

Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன சிறுமியை தேட டீசல் போட பணம் தந்தால்தான் தேடுவோம் என மனசாட்சியின்றி போலீஸார் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் காணாமல் போன தனது மைனர் மகளை தேடுவதற்காக போலீஸ் வாகனங்களில் டீசல் நிரப்ப அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரூ 10 ஆயிரம் முதல் ரூ 15 ஆயிரம் வரை கொடுத்ததாகவும் அந்த மாற்றுத்திறனாளி தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியா என்ற அந்த பெண் கான்பூர் உயரதிகாரியை அணுகியதை அடுத்து உத்தரப்பிரதேச போலீஸாரின் மெத்தனப்போக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையை தேர்வு செய்த ஆக்ஸ்போர்டு.. மோடி அதிகம் பயன்படுத்திய வார்த்தை2020 ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையை தேர்வு செய்த ஆக்ஸ்போர்டு.. மோடி அதிகம் பயன்படுத்திய வார்த்தை

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

கடந்த மாதம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தனது காணாமல் போன மகளை கண்டுபிடித்துத் தர உள்ளூர் போலீஸார் உதவவில்லை என கான்பூர் உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளார். புகார் கொடுத்த பின்னர் அந்த தாய் செய்தியாளர்களை சந்தித்தார்.

டீசல் நிரப்ப

டீசல் நிரப்ப

அப்போது அவர் கூறுகையில் உள்ளூர் போலீஸார் எனது மகளை தேடுகிறார்கள் என கூறினார்கள். சில சமயங்களில் அவர்கள் என் மகளின் நடத்தையில் தவறு இருப்பதாகவும் கூறி என்னை இழிவுப்படுத்தினார்கள். மேலும் எனது மகளை தேட டீசல் நிரப்பும்படி என்னிடம் போலீஸார் தெரிவித்தார்கள்.

உதவவில்லை

உதவவில்லை

நான் அவர்களின் வாகனங்களில் டீசலை நிரப்பினேன். நான் 3 முதல் 4 முறை பணம் செலுத்தியுள்ளேன். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இரண்டு போலீஸார் உள்ளனர். அவர்களில் ஒருவர் எனக்கு உதவுகிறார், மற்றொருவர் எனக்கு உதவவில்லை என்று கூறினார்.

ஏழைத்தாய்

ஏழைத்தாய்

மேலும் டீசல் நிரப்ப ரூ 15 ஆயிரம வரை செலவு செய்துள்ளதாகவும் அந்த ஏழைத்தாய் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து கான்பூர் மாவட்ட நிர்வாகம் கூறுகையில், அந்த பெண்ணின் கூற்றில் உண்மை இருப்பதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்கவும் உயரதிகாரிகளின் உத்தரவின் படி 4 குழுக்களை போலீஸார் அமைத்துள்ளனர்.

English summary
Uttar Pradesh Police asks bribe from elderly woman to search her missing minor girl. They also asked money to fill diesel in their vehicles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X