For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஏஏவை அமல்படுத்த முடியாது என எந்த மாநிலமும் சொல்ல முடியாது.. மூத்த காங். தலைவர் கபில்சிபல்

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என எந்த மாநிலமும் சொல்ல முடியாது. அவ்வாறு கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது.

அது போல் சென்னையிலும் சில முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பானர்ஜி

பானர்ஜி

இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா முதல்வர்கள் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், கமல்நாத், உத்தவ் தாக்கரே ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கோழிக்கோட்டில் 4 நாட்கள் இலக்கிய விழா நடைபெற்றது.

சட்டம்

சட்டம்

அந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டது.

சிஏஏ

சிஏஏ

இந்த சூழலில் எந்த ஒரு மாநிலமும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என கூறவே முடியாது. அவ்வாறு கூறினால் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சிஏஏ சட்டத்தை நீங்கள் (மாநிலங்கள்) எதிர்க்கலாம்.

வளர்ச்சி

வளர்ச்சி

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். சட்டத்தை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால் அமல்படுத்த மாட்டோம் என கூற முடியாது. இந்திய மக்கள் அனைவரும் இந்தியாவின் வருங்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனர். அனைவரும் வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளனர்.

பரபரப்பு

பரபரப்பு

ஆனால் மோடி என்ன செய்துவிட்டார்? நாட்டை வளர்ச்சி அடைய செய்வதை விட அவரை வளர்த்துக் கொண்டார் என கபில் சிபல் கூறினார். காங்கிரஸ் கட்சி சிஏஏ சட்டத்தை எதிர்க்கும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் எதிர்க்கும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரோ இது போல் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Congress leader and Senior advocate Kapil Sibal says that no state can deny implementation of Citizenship Amendment Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X