For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. காஷ்மீரில் சிறப்பு விழா!

19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு காஷ்மீரில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

காஷ்மீர்: 19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு காஷ்மீரில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது.

1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதியில், மே தொடங்கி ஜூலை மாதம் வரை கார்கில் போர் நடந்தது. ஆனால் அதற்கு முன்பே பல வருடங்களாக இந்த பகுதியில் பிரச்சனை நிலவி வந்தது. கார்கில் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியதில் இருந்தே, இரண்டு நாடுகளுக்கும் பெரிய பிரச்சனை நிலவி வந்தது.

Kargil Diwas: India celebrates 19th anniversary of victory at Drass War Memorial in J&K

இந்த நிலையில்தான் இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் பெரிய போர் உருவானது. இந்திய படை வலுவாக இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தி வந்தது. உலக நாடுகள் கணித்தது போலவே, இந்தியா இந்த போரில் வென்றது.

இந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானில் மட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலகத்திற்கும் இந்தியாவின் வலிமை அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான நாடாக மாறியது.

Kargil Diwas: India celebrates 19th anniversary of victory at Drass War Memorial in J&K

இந்தநிலையில் தற்போது 19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு காஷ்மீரில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. காஷ்மீரில் உள்ள டிராஸ் வார் மெமோரியல் என்ற, கார்கில் போர் நினைவிடத்தில் சிறப்பு விழா நடக்கிறது.

இந்த போரில் இறந்த 500 இந்திய வீரர்களுக்கு இந்த விழாவில் மரியாதை செலுத்தப்படும். அதேபோல், இந்த போரில் கலந்து கொண்டு உயிரோடு இருக்கும் வீரர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். இன்று தொடங்கும் விழா 26ம் தேதி வரை நடைபெறும்.

English summary
Kargil Diwas: India celebrates 19th anniversary of victory at Drass War Memorial in J&K.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X