For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்கிலில் இருந்து பாக் படைகளை விரட்டி போரை முடித்த அதிரடி படை... 8 சீக்கிய பட்டாலியன்!

கார்கிலில் இருந்து பாகிஸ்தான் படைகளை விரட்ட முக்கிய பங்காற்றிய 8 சீக்கிய பட்டாலியன் படை வீரர்கள் குறித்து பிரிகேடியர் பாஜ்வா கருத்து தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கார்கில் வெற்றி நினைவுநாளை முன்னிட்டு காஷ்மீரில் கொண்டாட்டம்- வீடியோ

    டெல்லி: கார்கிலின் போரின் போது டைகர் ஹில்ஸை கைப்பற்ற முக்கிய பங்காற்றிய 8 சீக்கிய பட்டாலியன் படை குறித்து மனம் திறந்துள்ளார் பிரிகேடியர் எம்பிஎஸ் பாஜ்வா.

    கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது இந்திய வீரர்கள் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து அந்த படைகளை விரட்டியடித்தனர்.

    இதை ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாக வீரர்கள் கொண்டாடி வருகிறது இந்தியா. கார்கில் போர் குறித்து பிரிகேடியர் எம்பிஎஸ் பாஜ்வா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    கட்டுக்கடங்கவில்லை

    கட்டுக்கடங்கவில்லை

    அப்போது அவர் கூறுகையில் பாகிஸ்தான் படைகள் நுழைந்தவுடன் முதலில் பிரிகேடியர் தேவிந்தர் சிங் தலைமையில் 70 இன்பேன்டரி பிரிகேட் படையினர் அனுப்பப்பட்டனர். இதையடுத்து நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பிரிகேடியர் அமர் ஆல் தலைமையில் 56 பிரிகேட் படையினர் அனுப்பப்பட்டனர்.

    இன்னல்கள்

    இன்னல்கள்

    இதையடுத்து பட்டாலியன் படைகள் ஒவ்வொன்றாக அனுப்பப்பட்டது.இந்த போரில் இறுதியாக நானும் ஈடுபட்டேன். அப்போது டைகர் ஹில்ஸை இன்னும் சில நாட்களில் கைப்பற்ற வேண்டும் என்று மேஜர் ஜெனரல் மோஹிந்தர் பூரி உத்தரவிட்டார். இதையடுத்து போர் களத்துக்கு பல்வேறு இன்னல்களை கடந்து வந்துள்ளதால் நான் எந்த கேள்வியையும் அவரிடம் கேட்கவில்லை.

    மலையேற்ற பள்ளி

    மலையேற்ற பள்ளி

    அடுத்த நாள் காலை அந்த பகுதிக்கு நான் சென்றேன். ஒரு இடத்தில் பூமியில் புதையுண்ட நான் போருக்கான திட்டமிட்டேன். 18 கிரினேடியர்கள் மற்றும் 8 சீக்கிய பட்டாலியன் படைகளை ஈடுபடுத்த திட்டமிட்டேன். டைகர் ஹில்ஸின் மற்றொரு கடினமான பகுதிக்கு செல்வது என்று முடிவு செய்தோம். இதற்காக மலையேற்ற பள்ளியில் இருந்து வீரர்களை பெற்றுக் கொண்டேன்.

    நம்பிக்கை வார்த்தை

    நம்பிக்கை வார்த்தை

    18 கிரினேடியர் படையை சேர்ந்த பால்வான் சிங் மலை உச்சியில் ஏறினார். மேலும் யோகேந்தர் யாதவும் மலை உச்சிக்கு சென்றார். அப்போது பாகிஸ்தான் படைகள் பயங்கர துப்பாக்கி சூட்டை நடத்தின. அச்சமயம் 8 சீக்கிய படைப் பிரிவினர் மலை உச்சி செல்வதற்காக தொங்கி கொண்டிருந்தனர். அப்போது நான் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை ரேடியோ மூலம் கொடுத்தேன். இந்த சம்பவத்தின்போது 14 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    30 பாகிஸ்தானியர் கொலை

    30 பாகிஸ்தானியர் கொலை

    தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. அப்போது 8 சீக்கிய படையில் ஒருவர் என்னிடம் கூறினார்- ஒரு பெரிய கிணறு ஒன்றின் மீது பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தொடர் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் படைகளுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார் என்றார். இதையடுத்து அந்த பாகிஸ்தான் அதிகாரியும் அவருடன் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து டைகர் ஹில்ஸை இந்திய படைகள் பிடித்தன. இந்த போரில் 30 பாகிஸ்தானியர் கொல்லப்பட்டனர் என்றார் பாஜ்வா.

    English summary
    Kargil War: 8 Sikh played a Vital role in capturing Tiger Hill, says Brigadier Bajwa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X