For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விருப்பம்... உதவியாளர் தகவல்!

குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விரும்புவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விரும்புவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிம்ன்றம் நேற்று முன்தினம் 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

கர்ணன் ஆந்திராவில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலால் போலீசார் அங்கேயும் தேடுதல் 2வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞரும் உதவியாளருமான ரமேஷ் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

நீதிபதி எங்கே?

நீதிபதி எங்கே?

அப்போது ஒருவேளை நீதிபதி கர்ணன் நாட்டை விட்டு சென்று இருக்கலாம் அல்லது நாட்டைவிட்டு வெளியே செல்லாமலும் இருக்கலாம் என மழுப்பலாக பதிலளித்து உள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா என்பதை தெளிவாக கூற மறுத்துவிட்டார்.

குடியரசுத் தலைவர் தலையிடனும்

குடியரசுத் தலைவர் தலையிடனும்

மேலும் நீதிபதி கர்ணன் குடியரசுத் தலைவரிடம் முறையிட விரும்புகிறார், இடைக்கால ஜாமீன் பெற விரும்புகிறார். ஏற்கெனவே அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனு நாடாளுமன்றத்திற்கு இதுவரை அனுப்பப்படவில்லை.

போராட்டத்துக்கு தயாராகிறோம்

போராட்டத்துக்கு தயாராகிறோம்

அதை குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கர்ணன் எதிர்பார்க்கிறார் என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார். மற்றொரு பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்விவகாரத்தில் அடுத்தக்கட்ட சட்டப்பூர்வமான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என கூறியுள்ளார்.

தலைமறைவாக இருக்கனும்

தலைமறைவாக இருக்கனும்

அதற்கான நேரம் வரும்வரையில் அவர் தலைமறைவாக இருக்கவேண்டும் என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவரது உதவியாளர் ரமேஷின் இந்த கருத்தால், நீதிபதி கர்ணன் வங்கதேசம் அல்லது நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
Justice Karnan's lawyer says that Karnan wants President of India should interfere in this issue. Karnan is getting ready for the next protest his lawyer said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X