For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா, அன்பழகன் தரப்பு மனுக்கள் ஏற்பு: ஜெ. விடுதலைக்கு எதிரான விசாரணை ஜூலை 24ல் தொடக்கம்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மட்டுமின்றி, அன்பழகன் தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு ஏற்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 27ல் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

தண்டனையை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். விசாரணை முடிவில், நால்வரையும் நிரபராதி என்று மே 11ம் தேதி, நீதிபதி சி.ஆர். குமாரசாமி தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பில் கணித தவறு உள்ளிட்ட பல்வேறு பிழைகள் இருப்பதாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்தார். எனவே, அப்பீலுக்கு ஏற்ற வழக்கு இது என்று அரசுக்கு சிபாரிசு செய்தார். கர்நாடக அமைச்சரவையும், இதை ஏற்று, மேல்முறையீட்டுக்கு பச்சைக்கொடி காண்பித்தது.

குறைபாடுகள்

குறைபாடுகள்

எனவே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் ஜூன் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்வதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய, 6 பேர் குழுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நியமித்தது. அந்த குழு நடத்திய ஆய்வில், கர்நாடக அரசின் மனுவில் சுமார் 10 குறைபாடுகள் இருந்தது சுட்டிக் காட்டப்பட்டது.

திருத்தப்பட்ட மனு

திருத்தப்பட்ட மனு

இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் குழுவினர் மேல்முறையீட்டு மனுவை திருத்தும் பணியில் ஈடுபட்டது. பணிகள் முடிந்ததும், கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி தாக்கல் செய்தார். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

அன்பழகன் தரப்பு

அன்பழகன் தரப்பு

அதேபோல தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. அன்பழகன் தரப்பில் மேல்முறையீட்டு மனுவில் சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டிய 9 பிழைகள் திருத்தம் செய்யப்பட்டு மூத்த வக்கீல் வி.ஜி.பிரகாசம் மீண்டும் தாக்கல் செய்திருந்தது நினைவிருக்கலாம்.

24ல் விசாரணை

24ல் விசாரணை

இந்த 2 மனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு நேற்று வழக்கு எண் வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு வட்டார தகவல்படி, கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 24ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அமர்வில் விசாரிக்கப்படும் என்பது நாளை (சனிக்கிழமை) அல்லது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சேர்த்தே விசாரணை

சேர்த்தே விசாரணை

அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவுடன் இணைத்தே விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் பரிசீலனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka and Anbalagan's appeal plea against acquittal of Jayalalithaa from the assets case accepted by the Supreme Court of India. The case expected to taken up on July 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X