For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவில் மோடிக்கு 43% பேர் ஆதரவு - ராகுல்காந்தி 28% மட்டுமே - பரபர சர்வே

கர்நாடகா மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு 43 சதவிகித மக்களின் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் ராகுல்காந்திக்கு வெறும் 28 சதவிகிதம் மக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் மோடிக்கு ஆதரவு அளிப்பதாக 43 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். ராகுல்காந்திக்கு வெறும் 28 சதவிகிதம் மக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் பாஜகவுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பெரிய மாநிலமான கர்நாடக தேர்தல் என்பது அடுத்த வருடம் நடைபெற உள்ள லோக்சபாவுக்கு முந்தைய அரையிறுதி ஆட்டத்தை போன்றது.

Karnataka assembly election 2018: 43% people support Modi

இதில் தோல்வியடைந்தால், பாஜக அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க மனதளவில் தைரியத்தை இழந்துவிடும். மோடி அலை இல்லை என்ற சூழல் உருவாகிவிடும். கடந்த 2014 ஆம் ஆண்டு வீசிய மோடி அலை பாஜக வென்று ஆட்சியைக் கைப்பற்ற காரணமாக அமைந்தது. இதனையடுத்து அடுத்தடுத்த மாநிலங்களில் கிடைத்த வெற்றிகள் மோடி அலை வீசுவதை உறுதி செய்தது.

அதே போல கர்நாடகாவிலும் மோடி அலை வீசுவதாகவே தெரிகிறது. மக்கள் கூறியுள்ளனர். ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மோடிக்கு ஆதரவு அளிப்பதாக 43 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். ராகுல்காந்திக்கு வெறும் 28 சதவிகிதம் மக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

சித்தராமைய்யா முதல்வராக 30 சதவிகிதம் பேர் கூறினாலும், ராகுல்காந்திக்கு மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் எடியூரப்பா முதல்வராக 25 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்தாலும் மோடிக்காகவே 43 சதவிகிதம் பேர் வாக்காளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் ஏற்கனவே ஒருமுறை பாஜக ஆட்சி அமைந்துள்ளது. எனவே அந்த மாநிலத்தில் கூட ஆட்சியை பிடிக்க முடியாவிட்டால், மோடி அசைக்க முடியாத தலைவர் என்ற அந்தஸ்தை இழந்துவிடுவார் என நினைக்கிறார்கள் பாஜகவினர். எனவே, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. இந்த சூழ்நிலையில் பாஜகவினருக்கு நம்பிக்கை தரும் விதமாகவே ஏபிபி கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது.

English summary
43% people support PM Modi says ABP survey. 224-member Karnataka Assembly election will take place in a single phase on May 12. Counting of votes will occur on May 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X