For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் எப்போது தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், மே மாதம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Karnataka assembly elections 2018 on May 2?

தலைமை செயலாளருக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், மே 2ம் தேதி தேர்தலை நடத்த வாய்ப்புகள் உள்ளனவா என கேட்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள நிலவரத்தை பொறுத்து, தலைமை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்புவார். அந்த பதிலை பொறுத்து, தேர்தல் தேதியை, ஆணையம் முடிவு செய்யும்.

2013ம் ஆண்டு, கர்நாடக சட்டசபை தேர்தல் மே 5ம் தேதி நடைபெற்றது. எனவே இம்முறையும் மே மாதமே தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலை போலவே இம்முறையும், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Karnataka Assembly elections 2018 are likely to be held in the first week of May. The Election Commission of India has written to the Chief Secretary of the state seeking to know if polls could be held on May 2. Although there is no official word on the poll date, the ECI would like to conduct polls in the state in the first week of May. It is now for the Chief Secretary to respond to the ECI regarding the date. In 2013, elections were held in Karnataka on May 5. The polls like the last time would be held in a single phase in 2018 as well. The term of the existing government comes to an end in May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X