For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று கர்நாடகா பந்த்..பெங்களூரில் எவையெல்லாம் முடங்கும், எதெல்லாம் இயங்கும்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழகம் எதிர்க்கிறது. இதை எதிர்த்து கர்நாடா பந்த் இன்று நடக்கிறது. கர்நாடக பந்த்தையடுத்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது என்பது பற்றிய ஒரு பார்வை:

Karnataka Bandh: What will be closed and what will be open tomorrow

பந்த்தால் பாதிக்கப்படுபவை:

*பெங்களூரு நகர பஸ்கள், கேஎஸ்ஆர்டிசி பஸ்கள். குறிப்பாக, தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்படும்.

*பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சி ஓடாது. அந்தந்த சங்கங்கள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு சப்ளை நாளை வழங்கப்படாது.

* திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டிருக்கும். சினிமா சூட்டிங் நடக்காது.

* பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* கோடை விடுமுறை காரணமாக, ஏற்கனவே பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பிருக்காது.

* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும்.

* பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படும்.

இயங்க கூடியவை:

*மருத்துவமனைகள் வழக்கம்போல இயங்கும். மெடிக்கல்கள் திறந்திருக்கும்.

*ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை வாகனங்கள் வழக்கம்போல இயங்கும்.

* வங்கிப் பணிகள் நடைபெறுமா என்பது பற்றி உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

English summary
A day before the bandh, which is likely to hit normal life in Bangalore and across Karnataka, BMTC and KSRTC officials informed that there will be less number of buses on Saturday, April 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X