For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக் கூடாது.. சொல்வது பாஜக தலைவர் எடியூரப்பா

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்ட முடிவுப்படி, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 3,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவரும், மாஜி முதல்வருமான எடியூரப்பா கூறியது: காவிரி மேற்பார்வை குழு உத்தரவை ஏற்றால் கர்நாடகாவுக்கு சுமார், 2.75 டிஎம்சி தண்ணீர் இழப்பு ஏற்படும். எனவே தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் விடக்கூடாது என்ற முடிவை கர்நாடக அரசு எடுக்க வேண்டும். அப்படி ஒரு முடிவெடுத்தால், ஆறரை கோடி கர்நாடக மக்களும் கர்நாடக அரசு முடிவுக்கு கட்டுப்படுவார்கள்.

Karnataka BJP chief Yeddiyurappa asks stop the Cauvery water flow

கர்நாடக மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில், ஒரு சொட்டு தண்ணீரையும் தமிழகத்திற்கு விடக்கூடாது என்பதே கர்நாடக பாஜக நிலைப்பாடு. உச்சநீதிமன்றத்திலும், காவிரி மேற்பார்வை குழுவிலும், கர்நாடக மாநில அரசின் வாதம் பலவீனமாக இருந்ததே, இந்த தோல்விக்கு காரணம். தண்ணீர் திறப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறிவிட்டு, தண்ணீர் இல்லாமல் கஷ்டமாக உள்ளது என மாநில மக்களிடம் கூறும் இரட்டை நிலைப்பாட்டை அரசு எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட அரசு இருக்கும்வரை கர்நாடக மக்களுக்கு விடிவு காலம் கிடையாது. இவ்வாறு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

English summary
Karnataka BJP chief Yeddiyurappa request the state gvt, that it should stop the Cauvery water flow to TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X