For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்.. புதிய காங்கிரஸ்-மஜத அமைச்சர்கள் பதவியேற்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி | கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 34 பேர் தற்போது பதவியேற்றுள்ளார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக முதல்வராக மே 23ம் தேதி பதவியேற்றார் மஜத தலைவரான குமாரசாமி. அன்றே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஷ்வர் துணை முதல்வராக பதவியேற்றார்.

    Karnataka cabinet expansion today

    இதன்பிறகு இரு கட்சிகள் நடுவே அமைச்சரவை அமைப்பதில் பெரும் இழுபறி நடந்தது. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்துள்ள நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் சார்பில் 22 பேரும், மஜத சார்பில் 12 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.

    Karnataka cabinet expansion today

    டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். டி.கே.சிவக்குமார் நீர் வளத்துறை அமைச்சராகி உள்ளார். ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி. தேவெ கெளடாவும் அமைச்சர்களாகி உள்ளார்.

    அதேபோல் கேஜெ ஜார்ஜ், டிசி தமன்னா ஆகியோரும் அமைச்சராக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவையின் முழு விவரம் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.

    English summary
    H D Kumaraswamy will expand his two-member cabinet today with the Congress expected to make up a majority of the new ministers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X