For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி

கர்நாடக அமைச்சரவை இறுதி வடிவத்தை எடுத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சரவை ஒதுக்கீட்டில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக அமைச்சரவை இறுதி வடிவத்தை எடுத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதனால் கட்சிக்கு எதிராக போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றார். கடைசி நேரத்தில் பல களேபரங்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார்.ஆனாலும் பல் பிரச்சனைகள் காரணமாக அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    Karnataka cabinet: Two-timers in Congress may be left out of ministry

    காங்கிரஸ் கட்சியுடன் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது. அதன்பின் அமைச்சரவை ஒதுக்கீட்டில் உடன்படிக்கை எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 22 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மஜத கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது.

    இதில் உள்துறை, வீடு, நீர் ஆதாரங்கள், சுங்கவரி, கல்வி, போக்குவரத்து, உடல்நலம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆகிய முக்கியமான துறைகளை காங்கிரஸ் பெறுகிறது. மஜத பொதுப்பணி துறை, வருவாய், கூட்டுறவு விவகாரங்கள் ஆகிய துறைகளை பெறுகிறது. அதிகம் பிரச்சனைக்குள்ளான நிதி துறையை மஜத கவனிக்க உள்ளது.

    ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளாது.

    ஆனால் டிகே சிவக்குமார், ஜார்ஜ், ரோஷன், தேஷ்பாண்டே, ஷாமனுர் சிவஷங்கரப்பா ஆகிய முக்கியமானவர்கள் இதனால் அமைச்சர் பதவியை பெற முடியாமல் போகும். இதனால் கட்சிக்குள் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்று டிகே சிவக்குமார் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    சுமார் 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதனால் கட்சிக்கு எதிராக போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.

    English summary
    All eyes would be on the announcement to be made by the Congress which finalizes its list of ministers in the Karnataka government. Both the JD(S) and Congress came to an agreement on the allocation of portfolios.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X