For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்க மாநில பொண்ணு அது.. தீபிகா படுகோனேவை மிரட்டுவோருக்கு எதிராக சீறும் கர்நாடக முதல்வர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனே உயிருக்கு வலதுசாரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே தலை காப்பாற்றப்பட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறிய நிலையில், சித்தராமையாவும் அதேபோன்ற கருத்தை நேற்று முன் வைத்தார்.

Karnataka CM asks Khattar to take action against those threatening Deepika Padukone

தீபிகா தலைக்கு, ஹரியானா மாநில பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் சுராஜ் பால் அமு, ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபிகாவை உயிரோடு எரித்தால் 1 கோடி ரூபாய் தரப்படும் என அகில பாரத சத்ரிய மகாசபை அறிவித்துள்ளது.

இதுபோன்ற மிரட்டல்விடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரியானா முதல்வர் கட்டாருக்கு டிவிட்டரில் சித்தராமையா கோரிக்கைவிடுத்துள்ளார்.

தீபிகா பெங்களூரில் இருக்கும்போதெல்லாம் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கர்நாடக அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்றும் சித்தராமையா கூறியுள்ளார். தீபிகாபடுகோனே கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் வெளியிட்ட டிவிட்டிலும், கர்நாடகாவை சேர்ந்தவர் தீபிகா படுகோன் என்பதையும், நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரரின் மகள் அவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Karnataka Chief Minister Siddaramaiah today asked his Haryana counterpart Manohar Lal Khattar to take "stringent action" against those threatening actress Deepika Padukone who is being targeted by fringe groups for her lead role in "Padmavati".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X