For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாகூப் மேமனை தூக்கிலிட்டவருக்கு ரூ. 10,000 பரிசு தந்த மாணவர்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிட்டவருக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கியுள்ளனர்.

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமனுக்கு கடந்த மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டவர் தான் யாகூப்பையும் தூக்கிலிட்டார்,

Karnataka college students donate Rs 10,000 to Yakub Memon's executioner

இந்நிலையில் யாகூப்பை தூக்கிலிட்டவருக்கு சிறைத்துறை மிகக் குறைவான சம்பளமே வழங்கியதாக தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து அந்த ஊழியருக்கு பணம் வசூலித்துக் கொடுக்க கர்நாடக மாநிலம் புத்தூரில் உள்ள அம்பிகா படவி பூர்வா வித்யாலயா மாணவர்கள் முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களிடமும் முடிந்தளவு பணம் வசூலிக்கப்பட்டது. அதன் மூலம் ரூ. 9 ஆயிரம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அப்பள்ளி ஆசிரியர்கள் ஆயிரம் ரூபாய் அளித்தனர்.

மொத்தம் கிடைத்த ரூ. 10 ஆயிரம் பணத்தை மகாராஷ்டிர மாநில போலீஸ் டிஜிபிக்கு மாணவர்கள் அனுப்பினர். இந்தப் பணத்தை யாகூப் மேமனை தூக்கில் போட்டவருக்கு வழங்கி கவுரவப்படுத்தும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பணம் யாகூப் மேமனை தூக்கில் போட்ட நபருக்கு முறைப்படி வழங்கப்பட்டது

English summary
In a unique gesture, students of a pre-university college in Puttur donated Rs 10,000 to the executioner who hanged Mumbai blast convict Yakub Memon recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X