For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமை எங்களிடமே இருக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா பிடிவாதம்

காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமை எங்களிடமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    வாரியம் என்பதற்கு பதில் ஆணையம் என வரைவு திட்டத்தில் திருத்தம்.

    டெல்லி : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமை தங்களிடமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.

    காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ள நிலையில், அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மேலும், உச்சநீதிமன்றம் வரைவு அறிக்கையில் சொல்லியிருந்த திருத்தங்களையும் மத்திய அரசு செய்துள்ளது.

    Karnataka Demands the authority is only with State Government

    இந்நிலையில், தங்களது அணையில் இருக்கும் நீர் இருப்பைத் தெரிவிக்க கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் மறுத்துவிட்டன. மேலும், காவிரி அணையில் நீர் திறந்துவிடும் உரிமை மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.

    இதுதொடர்பாக தமிழக அரசு ஆட்சேபம் செய்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் திருத்தப்பட்ட திட்ட வரைவு மீதான தீர்ப்பு நாளை மாலை வெளியாகும். அப்படி இல்லாவிட்டால் 22, 23ம் தேதிகளில் வெளியாகும் என்று சொல்லி வழக்கைத் தள்ளிவைத்தனர்.

    English summary
    Karnataka Demands the authority is only with State Government. Hearing on Cauvery Management Board today on the draft plan submitted by Central On SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X