For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்தராமையாவை வீழ்த்த 'கோ பூஜை'.. ரெட்டி சகோதரர்களின் 'பெஸ்ட் பிரண்ட்' ஸ்ரீராமுலு பயபக்தி

எடியூரப்பா முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஸ்ரீராமுலு அமைச்சர் பதவி வகித்தவர். ரெட்டி சகோதரர்களின் மிக நெருங்கிய நண்பர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெல்லாரி: முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாதாமி தொகுதியில் களமிறங்கியுள்ள ரெட்டி சகோதரர்களின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமுலு கோ பூஜை செய்துவிட்டு வாக்களித்தார்.

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதி மற்றும் மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதிகளில் சித்தராமையா போட்டியிடுகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அவர் வட கர்நாடகாவிலுள்ள பாதாமியில் போட்டியிடும் முடிவை எடுத்தார்.

Karnataka Election 2018: B.Sriramalu performed gau pooja

ஆனால், சித்தராமையாவை வீழ்த்த ஸ்ரீராமுலுதான் தக்க நபர் என்ற முடிவில் அவரை களமிறக்கியுள்ளது பாஜக. எடியூரப்பா முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஸ்ரீராமுலு அமைச்சர் பதவி வகித்தவர். ரெட்டி சகோதரர்களின் மிக நெருங்கிய நண்பர். பண பலத்தில் பெரியவர். பாதாமி பகுதிகளில் ஸ்ரீராமுலுவின், பழங்குடியின வாக்குகளும் கணிசமாக இருப்பதால் சித்தராமையாவை வீழ்த்துவது உறுதி என்று கூறி வருகிறார் ஸ்ரீராமுலு.

இன்று வாக்களிக்க செல்லும் முன்பாக தனது வீட்டில் அவர் கோமாதா பூஜை செய்தார். தெய்வ பலமும் இருந்தால் சித்தராமையாவை வீழ்த்துவது எளிதான விஷயம் என்று ஸ்ரீராமுலு நம்புவதாக அவர் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல, மாநிலம் முழுக்க கட்சி பாகுபாடின்றி பல வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் பூஜைகளில் ஈடுபட்டனர். கோ பூஜைகள் செய்தனர். மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி, ஆதிசுஞ்சனகிரி மடத்தில், சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து மனைவி அனிதாவுடன் வழிபட்டார்.

English summary
BJP's B.Sriramalu performed 'gau pooja' (cow worship) before casting his vote. He is contesting against CM Siddaramaiah from Badami constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X