For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: மாலை 5 மணிவரை 64.5% வாக்குகள் பதிவு

கர்நாடகா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணிவரை நடைபெற்றது. மாலை 5 மணிவரை சுமார் 65% வாக்குகள் பதிவாகி இருந்தன.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் கடந்த 4-ந் தேதி காலமானார். இதனால் அத்தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

Karnataka Assembly Election 2018 Live Updates: Voting begins today

அதே போல் ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் 10,000 வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. அத்தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மே 28-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதர 222 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. மொத்தம் 2,600 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

4,96,82,357 வாக்காளர்கள் வாக்களித்தனர். இவர்களில் 2,52,05,820 பேர் ஆண் வாக்களர்கள்; 2,44,71,979 பேர் பெண் வாக்காளர்கள். 4,552 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள்.

மாநிலம் முழுவதும் 56,696 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Newest First Oldest First
7:26 PM, 12 May

கர்நாடகாவில் 70 சதவீத வாக்குப்பதிவு ஆகியுள்ளது: தேர்தல் ஆணையம்
7:26 PM, 12 May

கடந்த சட்டசபை தேர்தலிலும் சுமார் 71% வாக்குகள் பதிவாகியிருந்தன
6:05 PM, 12 May

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது
6:04 PM, 12 May

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
5:51 PM, 12 May

இன்னும் சிறிது நேரத்தில் கர்நாடக தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைகிறது
5:12 PM, 12 May

4 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 61.55 சதவீத வாக்குப்பதிவு
4:58 PM, 12 May

கே.ஆர். புரத்தில் வாக்குச் சாவடிக்குள் பாம்பு புகுந்ததால் வாக்காளர்கள் பீதி
4:50 PM, 12 May

பாஜக வேட்பாளர் சிட்டிங் எம்எல்ஏ, ரகு ஆதரவாளர்கள் காங். ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
4:50 PM, 12 May

தமிழரான சம்பத்ராஜ் காங்கிரஸ் சார்பில் சி.வி.ராமன் நகர் தொகுதியில் போட்டி
4:50 PM, 12 May

பெங்களூரில் காங். வேட்பாளர் சம்பத்ராஜ் போட்டியிடும் சி.வி.ராமன் நகர் தொகுதியில் கைகலப்பு
4:26 PM, 12 May

கர்நாடகா: ஹூப்ளியில் வெளுத்து வாங்கும் மழை- வாக்குப் பதிவு பாதிப்பு
4:04 PM, 12 May

சித்தாபூர் தாலுகாவில் தர்கஸ்பெட் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
3:36 PM, 12 May

சித்தராமையா போட்டியிடும் பாதாமி தொகுதியில் மோதல்- போலீஸ் தடியடி
3:29 PM, 12 May

பெங்களூருவில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வாக்களித்தார்
3:15 PM, 12 May

கர்நாடகாவில் பிற்பகல் 3 மணி வரை 56% வாக்குகள் பதிவு
3:12 PM, 12 May

கர்நாடகா தேர்தல்- பகல் 1 மணி நிலவர வாக்குப் பதிவு
2:55 PM, 12 May

தார்வாட்டில் மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்
2:36 PM, 12 May

பந்த்வால் தொகுதியில் பகல் 12.45 மணிக்கு 60% வாக்குகள் பதிவானது
2:22 PM, 12 May

தட்சிண கன்னடாவில் அதிகபட்சமாக 47% வாக்குகள் பதிவு
2:22 PM, 12 May

பெங்களூரில் வழக்கம்போல ஒட்டுமொத்த வாக்களிப்பு குறைந்தது
2:22 PM, 12 May

பெங்களூரின் சில பகுதிகளில் மட்டும் நல்ல வாக்குப்பதிவு
2:22 PM, 12 May

பெங்களூர் நகரில் குறைந்தபட்சமாக 28% வாக்குப்பதிவு
2:21 PM, 12 May

சாமுண்டேஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடுகிறார் சித்தராமையா
2:21 PM, 12 May

சாமுண்டேஸ்வரி தொகுதியில் வாக்களித்தார் சித்தராமையா
12:46 PM, 12 May

மடிகேரியில் திருமண கோலத்தில் வாக்களித்த மணமகள்
12:32 PM, 12 May

வாக்களித்த பின் சித்தராமையா பேட்டி
12:32 PM, 12 May

150 இடங்களில் வெல்வோம் என கூறிய எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிப்பு
12:31 PM, 12 May

வாக்குச்சாவடிக்கு வெளியே பாஜகவினர் போராட்டம்
12:31 PM, 12 May

காங்கிரஸுக்கு வாக்களிக்க தேர்தல் பணியாளர்கள் வலியுறுத்தியதால் பதற்றம்
12:31 PM, 12 May

தார்வார்ட் கரடிகுட்டா வாக்குச் சாவடியில் பதற்றம்
READ MORE

English summary
Karnataka Election 2018 Live Updates: Check the latest updates on Karnataka Assembly Elections 2018 Polls. Voting in 222 Assembly seats to begin at 7 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X