For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக தேர்தல்: மக்களை வாக்களிக்க செய்ய இந்தியன் ஆயில் புதிய ஐடியா.. 1 ரூபாய் தள்ளுபடி!

கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்காவி தொகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் ஒரு ரூபாய் விலை குறைவாக விற்கப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்காவி தொகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் ஒரு ரூபாய் விலை குறைவாக விற்கப்படுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Karnataka Election: Indian Oil offers Rs.1 discount per litre to increase voting in Belagavi

ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வரை 10.45 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில் வாக்களிப்பை அதிகரிக்கும் விதத்திலும், வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வை உருவாக்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் வித்தியாசமான முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் பெட்ரோலில் ஒரு ருபாய் விலை குறைத்துள்ளது. கர்நாடகாவின் பெல்காவி தொகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது.

தற்போது பெட்ரோல் விலை 75.86 ரூபாய் ஆகும். ஆனால் பல்காவி தொகுதியில் மட்டும் 74.86 ரூபாய்க்கு விற்கப்படுதுகிறது. மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று இப்படி செய்ததால் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Karnataka Election: Indian Oil offers Rs.1 discount per litre to increase voting in Belagavi. Now they are selling petrol at 74.86, instead of the regular price is Rs 75.86.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X