For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா தேர்தல் 2018: பாஜகவின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கட்சியின் மூன்றாம் வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கட்சியின் மூன்றாம் வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் இரண்டிலும் கிறிஸ்துவர்கள் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Karnataka Elections 2018: BJP releases the third list of candidates

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக மூன்று கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 72 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதன்பின் 82 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பாஜக கட்சியின் மூன்றாம் வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது. 59 பேர் கொண்ட 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இன்னும் 13 இடங்களுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

பாஜகவை சேர்ந்த கோபால ராவ் சாமுண்டேஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட உள்ளார். இதில் எடியூரப்பாவின் மகன் ராகேவேந்திராவிற்கு இன்னும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு வருணா தொகுதியில் வாய்ப்பு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Bharatiya Janata Party (BJP) on Friday released the third list of its 59 candidates after party chief BS Yeddyurappa filed his nomination papers from Shikaripura constituencies. The saffron party announced 72 candidates in the first list and 82 candidates in the second list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X