For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் 7ல் 5ல் பாஜகவிற்கே வெற்றி.. தென்னிந்தியாவில் கால் பதிக்கிறதா?

கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 7ல் 5 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 7ல் 5 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு கருத்து கணிப்பில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரண்டு கருத்து கணிப்பில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெரும் என்று கூறப்படுகிறது.

 சி வோட்டர் கணிப்பு

சி வோட்டர் கணிப்பு

சி வோட்டர் எடுத்த கருத்து கணிப்புகளில் மொத்தம் 222 தொகுதிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளது. பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 93 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சிக்கு 25 இடங்களிலும் , மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

 நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ் கணிப்பு

நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ் கணிப்பு

நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜக 102 முதல் 110 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆளும் காங்கிரஸ் கட்சி 72 முதல் 78 இடங்களில் வெற்றி பெறும். மதசார்பற்ற ஜனதா தளம் 35 முதல் 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை 3 முதல் 5 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

 நியூஸ் நேஷன்

நியூஸ் நேஷன்

கர்நாடகாவில் நியூஸ் நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக கர்நாடகாவில் 105-109 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் 71-75 தொகுதிகளில் வெற்றி பெறும்.ஜேடிஎஸ் 36-40 தொகுதிகளில் வெற்றி பெறும்.மற்ற கட்சி, சுயேட்சைகள் 3-5 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

 ஏபிபி

ஏபிபி

கர்நாடகாவில் ஏபிபி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக கர்நாடகாவில் 97-109 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.காங்கிரஸ் 87-99 தொகுதிகளில் வெற்றி பெறும்.ஜேடிஎஸ் 21-30 தொகுதிகளில் வெற்றி பெறும். மற்ற கட்சி, சுயேட்சைகள் 1-8 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

 டைம்ஸ் நவ்- விஎம்ஆர்

டைம்ஸ் நவ்- விஎம்ஆர்

கர்நாடகாவில் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. காங்கிரஸ் கர்நாடகாவில் 90-103 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 80-93 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 31-39 தொகுதிகளில் வெற்றி பெறும். மற்ற கட்சி, சுயேட்சைகள் 2-4 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

 டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா

டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா

கர்நாடகாவில் டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக கர்நாடகாவில் 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் 73 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 26 தொகுதிகளில் வெற்றி பெறும்.மற்ற கட்சி, சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

 திக்விஜய் கன்னடா சேனல் கணிப்பு

திக்விஜய் கன்னடா சேனல் கணிப்பு

கர்நாடகாவில் வெளியாகும் முன்னணி தினப்பத்திரிகையான விஜயவாணி மற்றும் அதன் குழும டிவி சேனலான திக்விஜய் கன்னடா சேனல் ஆகியவை இணைந்து நடத்திய எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இந்த எக்சிட் போல் முடிவுப்படி, பாஜகவுக்கு 103-107 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 76-80 தொகுதிகளில் வெல்லும் என்றும், தேவகவுடாவின் மஜத 31-35 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Karnataka Exit Polls 2018: BJP gets Thumps up in 5 out of 7 polls. KARNATAKA - EXIT POLLS 2018 . INDIA TODAY-AXIS 79-92 106-118 22-30 1-4. TIMESNOW-TODAY'S CHANAKYA 120 73 26 3. TIMES NOW-VMR 80-94 90-101 31-39 2-9. DIGVIJAYATV 103-107 76-80 31-35 4-8. ABP 97-109 87-99 21-30 1-8 C-VOTER 103 93 25 1. NEWSX-CNX 102-110 72-78 35-39 3-5. JAN KI BAAT 95-114 73-82 32-43 2-3.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X