For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா எக்சிட் போல்: காங்.,பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் தொங்கு சட்டசபை 'கன்பார்ம்'!

எக்சிட் போல் முடிவுகளின் படி கர்நாடகாவில் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா: காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும்..யாருக்கும் பெரும்பான்மை இல்லை- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் சில (எக்சிட் போல்) காங்கிரஸுக்கும் சில பாஜகவுக்கும் அதிக இடங்கள் கிடைக்கும் என கூறுகின்றன. ஆனால் எக்சிட் போல் முடிவுகளில் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறாததால் தொங்கு சட்டசபைதான் அமையும் என தெரிகிறது.

    கர்நாடகாவின் 224 தொகுதிகளில் 222 இடங்களுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 70% வாக்குகள் பதிவாகி உள்ளன.

    தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என டைம்ஸ் நவ், இந்தியா டுடே, திக்விஜய், ரிபப்ளிக், ஏபிபி தொலைக்காட்சிகள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

    காங்கிரஸுக்கு 106-118

    காங்கிரஸுக்கு 106-118

    இந்தியா டுடே கருத்து கணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 106 முதல் 118 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது. ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் வெல்லக் கூடும் என்கிறது இக்கருத்து கணிப்பு. மேலும் பாஜக 79 முதல் 92 இடங்களைத்தான் கைப்பற்றும். மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 முதல் 30 தொகுதிகளில் வெல்லும் என்கிறது. இந்தியா டுடே கருத்து கணிப்பு திட்டவட்டமாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கவில்லை.

    காங்கிரசுக்கு 90-103

    காங்கிரசுக்கு 90-103

    அதேபோல் டைம்ஸ் நவ் கருத்து கணிப்பிலும் கூட காங்கிரஸுக்கு 90 முதல் 103 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது. பாஜகவுக்கு 80 முதல் 93; மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 31 முதல் 39 இடங்கள் கிடைக்கும் என்கிறது. டைம்ஸ் நவ் சேனலைப் பொறுத்தவரையில் திட்டவட்டமாக தொங்கு சட்டசபைதான் என்கிறது.

    பாஜகவுக்கு 103- 107

    பாஜகவுக்கு 103- 107

    ஆனால் கன்னட சேனலான திக்விஜய் மற்றும் விஜயவாணி பத்திரிகை இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 103 முதல் 107 இடங்கள் வரை பெறும் என்கிறது. காங்கிரஸுக்கு 76 முதல் 80 தொகுதிகள்தானாம். மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 31 முதல் 35 தொகுதிகள் கிடைக்குமாம். பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும் கூட தொங்கு சட்டசபைதான் அமையும் என்பதே இக்கருத்து கணிப்பின் முடிவு.

    பாஜகவுக்கு 95-114 இடங்கள்

    பாஜகவுக்கு 95-114 இடங்கள்

    ரிப்பளிக் டிவியின் கருத்து கணிப்பிலும் பாஜகவுக்கு 95 முதல் 114 இடங்கள்; காங்கிரஸுக்கு 73 முதல் 82 இடங்கள்; மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 32 முதல் 43 இடங்கள் என்கிறது. இக்கருத்து கணிப்பும் கூட பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறவில்லை.

    பாஜகவுக்கு 97-109

    பாஜகவுக்கு 97-109

    ஏபிபி டிவியின் கருத்து கணிப்பிலும் பாஜகவுக்கு 97 முதல் 109; காங்கிரஸுக்கு 87 முதல் 99; மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 21 முதல் 30 இடங்கள் என்கிறது. இதுவும் கூட தொங்குசட்டசபைதான் என்கிறது.

    எக்சிட் போல் முடிவுகள் சில காங்கிரஸ் அதிக இடங்களையும் சில பாஜக அதிக இடங்களையும் கைப்பற்றும் என்கின்றன. ஆனால் எந்த எக்சிட் போல் முடிவும் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறவில்லை. இதனால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே அமையும் என தெரிகிறது.

    English summary
    Karnataka exit polls had predicted a hung assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X